'இவருக்கு மட்டும் ஏன் எப்போமே இப்படியே நடக்குது?!!'... 'தொடரிலிருந்தே திடீரென வெளியேறிய முக்கிய வீரர்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்த வருகிறது.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்த போட்டிகள் பரபரப்பை அதிகப்படுத்தும் வகையில் நடந்து வரும் நிலையில், ஹைதராபாத் அணியில் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த விஜய் சங்கர் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்தே வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஹைதராபாத் அணியில் ஆடி வரும் தமிழக வீரர் விஜய் சங்கர் அந்த அணிக்காக சிறப்பாக பந்து வீசி வருகிறார். அதிலும் அந்த அணியில் இருந்து புவனேஷ்வர் குமார், மிட்சல் மார்ஷ் உள்ளிட்ட வீரர்கள் வெளியேறியுள்ள நிலையில் விஜய் சங்கர் பவுலிங் அதிக முக்கியத்துவம் பெற்றது.
தற்போது வரை அணிக்காக அவசியமான நேரங்களில் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகளை எடுத்துவரும் இவர் சில போட்டிகளாக முக்கியமான விக்கெட்டுகளையும் எடுத்து வந்தார். அதேபோல பேட்டிங்கிலும் 30-40 ரன்களை எடுத்து அணிக்கு தேவையான ரன்களை கொடுத்தார். இந்த நிலையில்தான் இவர் காலில் ஏற்பட்ட இரண்டு காயங்கள் காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையிலேயே விஜய் சங்கர் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்தே வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இவர் தொடர்ந்து இனியும் நடப்பு தொடரில் ஆட கூடாது என அணியின் பிசியோ அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உலகக் கோப்பை தொடரின் போது இதேபோல காலில் காயம் ஏற்பட்ட காரணத்தால் தொடரில் இருந்து வெளியேறிய விஜய் சங்கர் ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வாகாத நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்தும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
