இது லிஸ்ட்லயே இல்லையே.. தீபக் சஹாருக்கு பதிலா இவரா..? நெட்டிசன்கள் சொன்ன அந்த வீரரின் பெயர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 12, 2022 07:59 PM

தீபக் சஹாருக்கு பதிலாக சிஎஸ்கே அணியில் விளையாட வாய்ப்புள்ள வீரர் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Fans urge, CSK may select Ishant Sharma to replace Deepak Chahar

SRH அணிக்கு வந்த புது சிக்கல்.. சில போட்டிகளை தவற விடும் ‘தமிழக’ வீரர்.. என்ன காரணம்..?

ஐபிஎல் மெகா ஏலத்தில் 14 கோடி ரூபாய் கொடுத்து தீபக் சாஹரை சிஎஸ்கே அணி வாங்கியது. ஆனால் காயம் காரணமாக சிஎஸ்கே அணியில் இன்னும் இணையாமல் உள்ளார். தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல வெளியாகியுள்ளது. அதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் தீபக் சஹார் விளையாட வாய்ப்பு இல்லை என சொல்லப்படுகிறது.

Fans urge, CSK may select Ishant Sharma to replace Deepak Chahar

அதே ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்றும் எந்த அணியும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவை எடுக்கவில்லை. சமீபத்தில் ஐபிஎல் தொடரில் கெஸ்ட் பாக்ஸ் எனப்படும் திரையில் மக்களோடு மக்களாக வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

அதனால் காயத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து விலக உள்ள தீபக் சாஹருக்கு பதிலாக இஷாந்த் சர்மாவை சிஎஸ்கே அணியில் எடுக்கலாம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதற்கு பிசிசிஐ அனுமதி வழங்க வேண்டும். தீபக் சாஹர் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் இணைந்து விடுவார் என்பதால், இஷாந்த் சர்மாவை தற்காலிமாக பயன்படுத்தி கொள்ள பிசிசிஐ அனுமதிக்குமா? என கேள்வி எழுந்துள்ளது.

 

CSK vs RCB: இன்னைக்காவது அந்த ‘இளம்’ வீரருக்கு வாய்ப்பு கிடைக்குமா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

 

Tags : #CRICKET #FANS #CSK #ISHANT SHARMA #DEEPAK CHAHAR #CSK BOWLER DEEPAK CHAHAR #IPL 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Fans urge, CSK may select Ishant Sharma to replace Deepak Chahar | Sports News.