‘அவருக்கு அப்புறம் ஜடேஜா தான்’!.. ரசிகர் போட்ட ட்வீட்டுக்கு யாரும் எதிர்பாக்காத பதில் சொன்ன மஞ்ச்ரேக்கர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் கபில் தேவ்-க்கு பிறகு சிறந்த ஆல்ரவுண்டராக ஜடேஜா உள்ளார் என ரசிகர் ஒருவரின் ட்விட்டர் பதிவுக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பதிலளித்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 326 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக அணியின் கேப்டன் ரஹானே 112 ரன்களும், ஆல்ரவுண்டர் ஜடேஜா 57 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
அதில் ஜடேஜா ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ வெய்ட் மற்றும் டிம் பெய்னேவின் விக்கெட்டை எடுத்து அசத்தினார். அதேபோல் அஸ்வின், பும்ரா, உமேஷ் யாதவ் மற்றும் முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். இந்த நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் கபில் தேவ்-க்கு பிறகு ஜடேஜா சிறந்த ஆல்ரவுண்டராக இருப்பதாக பதிவிட்டிருந்தார்.
Big admirer of Jadeja, when it comes to Tests, have always been for years. Test cricket is his strong suit. https://t.co/BEMS77ylDU
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) December 27, 2020
இதற்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ‘ஜடேஜாவை நான் எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டராக பாராட்டுவேன். டெஸ்ட் கிரிக்கெட்தான் அவரிடம் வலுவானதாக உள்ளது’ என அவர் பதிவிட்டுள்ளார்.