‘பிசினஸ் பார்ட்னர்ஸ் மோசடி’... 'புகாரளித்த முன்னாள் வீரரின் மனைவி'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 13, 2019 10:42 PM

தனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி, 4.5 கோடி ரூபாய் கடன்பெற்றதாக, பிசினஸ் பார்ட்னர்கள் மீது, இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக்கின் மனைவி புகார் கொடுத்துள்ளார்.

Aarti Sehwag files forgery complaint against business partners

இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக்கின் மனைவி ஆர்த்தி. இவரது பிசினஸ் பார்ட்னர் ஒருவர், தனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி, நிறுவனம் ஒன்றிடம் 4.5 கோடி ரூபாய் கடன்பெற்றதாகவும், அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் தன்னை சிக்க வைத்துள்ளதாகவும் போலீசில் புகார் தந்துள்ளார். அந்த புகாரில் தன்னுடைய கையெழுத்து போலவே, வேறு ஒரு கையெழுத்து போட்டு, சில நிறுவனங்களில் இருந்து நாலரை கோடி ருபாய் தனது பார்ட்னர்கள் கடன் வாங்கி இருக்கிறார்கள் என்று புகார் கொடுத்துள்ளார்.

அப்படி வாங்கிய கடனையும் ஒழுங்காக திருப்பி செலுத்தவில்லை. அதோடு ஆர்த்தி சேவாக்கின் பிசினஸ் பார்ட்னர்கள், சேவாக்கின் பெயரை கூறி, கடன் வாங்கியதாகவும், அந்தக் கடனை திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் சரியான நேரத்தில் கடனை திருப்பி தராததால், மற்றும் கொடுத்த காசோலைகள் எதுவும் வங்கி கணக்கில் பணம் இல்லை என்பதாலும், பணம் கொடுத்தவர்கள் ஆர்த்தி சேவாக்கிற்கு வக்கீல் நோட்டீஸ் விட்டிருக்கிறார்கள்.

அதன்மூலமே ஆர்த்தி சேவாக்கிற்கு, நாலரை கோடி ரூபாய் கடன் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் தன்னை சிக்கவைத்துள்ள பிசினஸ் பார்ட்னர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீஸ் காவல் நிலையத்தில் ஆர்த்தி புகார் கொடுத்துள்ளார். அதன்படி அவர்களின் பிசினஸ் பார்ட்னர்கள் மீது ipc 420, 468, 471 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.