தம்பி 'பந்த' கையில எடுத்துட்டாருன்னா... எதிர்ல நிக்குற பேட்ஸ்மேன் 'கால்' உதறும்...! 'அப்படி ஒரு பவுலிங்...' - கிரிக்கெட் வரலாற்றில் 'சாதனை' படைத்த இளம் வீரர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅபுதாபியில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பையில் அயர்லாந்து அணியின் குர்டிஸ் காம்பர் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
அபுதாபியில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் மூன்றாவது டி-20 போட்டியில் நேற்று அயர்லாந்து அணியும் நெதர்லாந்து அணியும் மோதி வருகின்றன. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் கெத்தாக பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆனால் அயர்லாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க நெதர்லாந்து அணிக்கு பேட்டிங்கில் மிகப்பெரும் ஏமாற்றமே கிடைத்தது. நெதர்லாந்து அணியின் துவக்க வீரரான பென் கூப்பர் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். மற்றொரு துவக்க வீரரான மேக்ஸ் 51 ரன்கள் எடுத்து கொடுத்த போதிலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
இந்த போட்டியில் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால் அயர்லாந்து வீரரான குர்டிஸ் சாம்பர் வீசிய 10-வது ஓவர் தான் இந்த மேட்ச்சின் ஹைலைட்டாக இருந்தது. குர்டிஸ் சாம்பர் 10 ஓவரின் ஓவரின் கடைசி நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி நெதர்லாந்து அணியை நிலைகுலைய செய்தார்.
குர்டிஸ் சாம்பரின் இந்த விக்கெட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
குர்டிஸ் சாம்பர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய போது, டி-20 உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில், பிரட் லீக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடித்தார்.
அதன்பின் 4-வது விக்கெட்டை வீழ்த்திய போது டி-20 போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது வீரராகவும் இணைந்துள்ளது. இதற்கு முன் ரசீத் கான் மற்றும் லசீத் மலிங்கா ஆகியோர் டி-20 போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர், தற்போது இந்த வரிசையில் தான் குர்டிஸ் இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.