"ஐபிஎல் ஹிஸ்டரிலயே... இப்படி ஒரு மோசமான சாதனையை..." - 'கோலியையே பின்னுக்குத் தள்ளிய பிரபல வீரர்!!!'... யாருங்க அது???
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல்முதலாக தோல்வியைத் தழுவியுள்ளது.
நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் அந்த அணி வீரர் ராபின் உத்தப்பா மோசமான சாதனை ஒன்றிற்கு சொந்தக்காரராகியுள்ளார். ஐபிஎல் தொடரில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் உத்தப்பா இதுவரை மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, புனே வாரியர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
இந்நிலையில், நேற்றைய போட்டியில் தோற்றதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அதிகமுறை தோல்வியை சந்தித்த அணி வீரர் என்ற மோசமான சாதனை பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி தற்போது முதலிடத்தில் ராபின் உத்தப்பா உள்ளார்.
பெங்களூரு அணிக்காக விளையாடிவரும் விராட் கோலி இதுவரை அந்த அணிக்காக விளையாடி 90 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், தற்போது அதை உடைத்து 91 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள அணி வீரராக உத்தப்பா உள்ளார். இவர்களுக்கு அடுத்தடுத்த இடங்களில் கொல்கத்தா அணியின் தினேஷ் கார்த்திக் (87 தோல்விகள்), மும்பை அணியின் ரோஹித் ஷர்மா (85 தோல்விகள்), அமித் மிஷ்ரா மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் (57 தோல்விகள்) ஆகியோர் உள்ளனர்.