'இந்த 6 நாள் இடைவெளிய நல்லாவே யூஸ் பண்ணிருக்கோம்...' - சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நம்பிக்கை...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஎங்களுக்கு கிடைத்த 6 நாள் இடைவெளியை சிறப்பாக பயன்படுத்தியுள்ளோம்என்று சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2020 சீசன் செப்டம்பர் மாதம் 19-ந்தேதி தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது 22-ந்தேதி நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது. 25-ந்தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது.
ஆறு நாள் இடைவெளிக்குப்பின் நாளை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த ஆறு நாள் இடைவெளியை சிறப்பாக பயன்படுத்தியுள்னோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.
இதுகபற்றி ஸ்டீபன் பிளமிங் தெரிவிக்கையில் ‘‘முதல் 3 போட்டிகள் அடுத்தடுத்து வந்த நிலையிலும், அனைத்து போட்டிகளும் மாறுபட்ட மைதானங்களில் நடந்த நிலையிலும் இந்த இடைவெளி கிடைத்தது நல்ல நேரம். தட்பவெப்ப நிலையை அறிய சிறந்த வாய்ப்பாக இருக்கும். ஒவ்வொரு அணிகளுக்கும் எதிராக முதல் அணியாக எதிர்த்து விளையாடுவது கடினம் தான். ஆட்டத்திற்கு வெளியேயும் எங்களுக்கு சில சவால்கள் காணப்பட்டது. இந்த இடைவெளியை நாங்கள் சிறப்பாக பயன்படுத்தியுள்ளோமநாம் என்ன செய்ய வேண்டும் போன்றவற்றில் தெளிவை பெற்றுள்ளோம்’’ என்று கூறியுள்ளார்.