"அடுத்த மேட்ச்லயாவது அவர் வருவாரா?"... 'அணியின் முக்கிய வீரர், எப்போது திரும்புவார்?'... 'CSK பயிற்சியாளர் புதிய தகவல்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை அணி வீரர் பிராவோ இன்னும் சில போட்டிகளில் இடம் பெறமாட்டார் என அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி, மைதானத்தில் ரசிகர்கள் இல்லாதபோதும் பரபரப்பாக நடந்து வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை - மும்பை அணிகள் மோதிய முதல் போட்டியில் சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூழலில், அணியில் ஆல்-ரவுண்டர் பிராவோ இடம் பெறவில்லை. இந்நிலையில் பிராவோ எப்போது திரும்புவார் என்பது குறித்துப் பேசியுள்ள சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், "சென்னை அணியில் பிராவோ இன்னும் சில போட்டிகளில் இடம் பெறமாட்டார். கால் மூட்டியில் காயம் ஏற்பட்டு தற்போது அவர் மீண்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
