VIDEO: நம்பி அவரு எடத்துல 'இறக்கி' விட்டதுக்கு நல்லா செஞ்சுட்டீங்க... தெறிக்க விடும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅபுதாபியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. இதில் தற்போது மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக ரோஹித், டி காக் இறங்கினர்.
நல்ல ஓபனிங் அளித்த இருவரையும் பியூஷ் சாவ்லா, சாம் கரண் அடுத்தடுத்து வெளியே அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சூர்யகுமார், திவாரி, அதிரடியாக விளையாடிய ஹர்திக், குர்னால், பொல்லார்ட் என அனைவரையும் சென்னை அணியின் பவுலிங் அணி சீரான இடைவெளியில் பெவிலியன் அனுப்பி வைத்தது.
குறிப்பாக ரெய்னாவுக்கு பதிலாக இறக்கி விடப்பட்ட டூ பிளசிஸ் எல்லைக்கோட்டில் நின்று இரண்டு கேட்சுகளை அற்புதமாக பிடித்தார்.
What a catch!@FAFDuplessis #IPL2020 #IPLinUAE #IPL2020Updates pic.twitter.com/weYMZA2tn8
— ✪ پٹھان (@drbadman007) September 19, 2020
அதாவது சிக்ஸருக்கு போகும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த பந்துகளை டூ பிளசிஸ் பிடித்து அதை மைதானத்துக்கு உள்ளே தூக்கிப்போட்டு மீண்டும் ஓடிவந்து பிடித்தார். அதிரடியாக ஆடக்கூடிய ஹர்திக், பொலார்ட் மற்றும் பேட்டின்சன் ஆகிய மூவரையும் பாப் டூ பிளசிஸ் தன்னுடைய அற்புத கேட்சுகளினால் வெளியில் அனுப்பி வைத்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் சாமி! நீங்க வேற லெவல் என கொண்டாடி வருகின்றனர்.