அவ்ளோ தூரம் சொல்லியும் 'கேட்க' மாட்டேன்னு சொல்லிட்டாரே... வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக முரளி விஜய், வாட்சன் இருவரும் இறங்கினர். இதில் வாட்சன் முதல் ஓவரின் கடைசி பந்தில் 4 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் பாப் டூ பிளசிஸ் களமிறங்கினார். 2-வது ஓவரை பட்டின்சன் வீச அந்த ஓவரின் 4-வது பந்து அவரின் காலில் பட்டது. ஆனால் அம்பயர் அவுட் கொடுக்க மறுத்து விட்டார்.

மும்பை அணி ரிவியூ கேட்கவில்லை. ஆனால் பந்து அந்த ஸ்டம்புகளை தகர்ப்பது ரீப்ளேவில் தெரிய வந்தது. தொடர்ந்து அந்த ஓவரின் கடைசி பந்து முரளி விஜய் காலில் பட்டது. அம்பயர் அவுட் கொடுக்க டூ பிளசிஸ் இது அவுட் இல்லை என கணித்து, ரிவியூ கேட்குமாறு விஜயிடம் கூறினார். ஆனால் அவர் ரிவியூ கேட்க மறுத்து விட்டார். இதனால் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை சென்னை அணி விரைவாக இழந்தது.
எனினும் அடுத்து இறங்கிய அம்பாதி ராயுடு டூ பிளசிஸுடன் இணைந்து சரவெடியாக வெளுத்தார். இந்த கூட்டணியை பிரிக்க மும்பை அணி படாதபாடு பட்டது. கடைசியில் 71 ரன்கள் எடுத்து ராயுடு வெற்றிக்கு உதவ டூ பிளசிஸ் தன்னுடைய பங்குக்கு 58 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். இருவருமே தங்களது முதல் போட்டியில் அரை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முரளி விஜய் ரிவியூ கேட்கவில்லை என்பதை கூறி அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர். குறிப்பாக பாப் டூ பிளசிஸ் அவ்வளவு எடுத்து கூறியும் முரளி விஜய் தன்னுடைய விக்கெட்டை விரைவாக தாரை வார்த்து வெளியேறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Murali Vijay : Ada ethuku ba review lam kettukitu asingama pic.twitter.com/ns6GOMmRBn
— Anbu Seivom ❤🤗 (@parasajoy) September 19, 2020
Murali Vijay scenery😅😅😅😅 pic.twitter.com/LYpzBLVj68
— Ajithiyan Karthi (@karthickram445) September 19, 2020
Exactly Murali Vijay 😤 pic.twitter.com/8or7Fqa0ti
— Pratheep_Editor (@pratheep_editor) September 19, 2020

மற்ற செய்திகள்
