VIDEO: ‘முதல் மேட்ச், முதல் விக்கெட்’.. கெத்துக்காட்டிய ‘தல’.. யாரோட விக்கெட் தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோனி தனது முதல் விக்கெட்டை டைவ் அடித்து பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
![IPL 2020: MS Dhoni excellent catch against Mumbai Indians IPL 2020: MS Dhoni excellent catch against Mumbai Indians](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/ipl-2020-ms-dhoni-excellent-catch-against-mumbai-indians.jpg)
ஐபிஎல் 13-வது கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று (19.09.2020) அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் டி காக் களமிறங்கினர்.
இதில் ரோஹித் ஷர்மா 12 ரன்களின் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து 33 ரன்களில் டி காக் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திவாரி மற்றும் சூர்யகுமார் யாதவ் கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் அதிகபட்சமாக திவாரி 42 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.
இதனை அடுத்து களமிறங்கிய பொல்லார்ட் மற்றும் க்ருணல் பாண்ட்யா, லுங்கி நிகிடியின் ஓவரில், விக்கெட் கீப்பர் தோனியின் கைகளில் கேட்ச் கொடுத்து அவுட்டாகினர். இதில் க்ருணல் பாண்ட்யாவின் விக்கெட்டை எடுக்க டைவ் அடித்து தோனி அசத்தினார். இந்த சீசனில் தோனி எடுத்த முதல் விக்கெட் இதுவாகும். 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை மும்பை அணி எடுத்தது.
#Dhoni #IPL2020 #CSKvsMI 🔥🔥🔥✨✨✨💪💪👑💪👑👑👑👑 @msdhoni ( No words ) #Dhoni #Dhoni #Dhoni #WhistlePodu pic.twitter.com/kbWAOlTP2T
— K. Kartik Rao (@actor_rao) September 19, 2020
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)