தயவுசெஞ்சு இதை பண்ணுங்க! உங்களுக்கு 'புண்ணியம்' கெடைக்கும்... கெஞ்சும் ரசிகர்கள் என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் போட்டி தற்போது அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்ய மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தற்போது சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்த நிலையில் கிரிக்கெட் போட்டியை ரசித்து வரும் ரசிகர்கள் கோரிக்கை ஒன்றை சமூக வலைதளங்களில் விடுத்து வருகின்றனர். கொரோனா காரணமாக மைதானத்தில் ரசிகர்கள் இன்றி போட்டி நடைபெற்று வருகிறது. இதனால் பழைய போட்டிகளில் ரசிகர்கள் ஆரவாரம் செய்த சத்தத்தினை ஒளிபரப்பி வீரர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
இதைக்கண்ட ரசிகர்கள் இந்த சத்தம் தங்களுக்கு மிகவும் எரிச்சலாக இருப்பதாகவும் அடுத்தடுத்த போட்டிகளில் இந்த சத்தத்தை நீக்க வேண்டும் எனவும் ஹாட் ஸ்டார் மற்றும் ஐபிஎல் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ரசிகர்களின் இந்த கோரிக்கை ஏற்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஆடியன்ஸ் இல்லாமலே Crowd சவுண்ட் வருது
இத கேட்ட உடனே உடைபெல்லாம் ஆடி போயிருச்சு #IPL2020 #CSKvsMI#Master pic.twitter.com/r8I60Sb3So
— மெர்சல் சிவா (@Sivaji_37) September 19, 2020
#IPL2020 pic.twitter.com/c2g2SEmAY1
— provider (@notes_walle) September 19, 2020
ஆடியன்ஸ் இல்லாம தான மேட்ச் நடக்குது... அப்புறம் எப்படி கமென்டரில crowd sound வருது... 😳 டகால்டிகளா... ஏமாத்துறீங்களா... #CSKvsMI #IPL2020
— சேந்தன் அமுதன் (@Sakthivel_twitt) September 19, 2020
#ஐபில்_மீம்ஸ்#விசில்போடு#சிஸ்கே #மும்பைஇந்தியன்ஸ் pic.twitter.com/rEfRL6TgCZ
— Vijesh Chandran🗯️ (@Vijesh145) September 19, 2020