ஏங்க 'அவரெல்லாம்' 16 கோடிக்கு 'வொர்த்தே' இல்லங்க...! 'இதனால அவருக்கு தான் பெரிய தலைவலி...' 'வேணும்னா 2 மேட்ச் அடிப்பாரு பாருங்க...' - வெளுத்து வாங்கிய பீட்டர்சன்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்ரவுண்டராக இந்த வருடம் களம் இறங்கியுள்ள தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் ஐபிஎல் ஏலத்தில் ரூ.16.25 கோடிக்கு வாங்கப்பட்டார்.
இதுவரை நடந்த எஐபிஎல் போட்டிகளில் எந்த வெளிநாட்டு வீரருக்கும் இவ்வளவு பணம் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டதில்லை. இந்த விலையே கிறிஸ் மோரிஸுக்கு தற்போது தலைவலியாக மாறியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்கு லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ளது. இதில் ஒரு போட்டியில் மட்டுமே அணியை சிக்ஸர் அடித்து வெல்ல வைத்துள்ளார். ஆனால், பவுலிங், பேட்டிங் ரெண்டிலும் அவரது பங்களிப்பு பெரிதாக சொல்லிக்கொள்ளும் படியாக ஒன்றும் இல்லை.
மும்பையில் நேற்று (22-04-2021) நடந்த பெங்களுரு அணிக்கு எதிராக மூன்று ஓவர்கள் வீசி 38 ரன்களை அள்ளி கொடுத்தார். இதனால் ரூ.16 கோடிக்கு வாங்கப்பட்ட வீரரிடம் இருந்து அணி நிர்வாகம் சிறந்த விளையாட்டை எதிர்பார்த்துள்ளது. அது மோரிசை மேலும் அழுத்தத்திற்கு தள்ளியுள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இதுகுறித்து பேசியுள்ளார். அப்போது,
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் கிறிஸ் மோரிஸுக்கு கொடுத்து வாங்கிய தொகை ரூ.16. கோடி என்பது என்னை பொருத்தவரைக்கும் மிகஅதிகம் என நான் நினைக்கிறேன். 16 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு கிறிஸ் மோரிஸ் மிக சிறப்பான வீரர் இல்லை.
ஆனால் இதுவே அவருக்கு அழுத்தத்தை உருவாக்கியுள்ளதுர. உண்மையில் தென் ஆப்பிரி்க்க அணியில் இருந்து எடுக்க முடிவு செய்யப்பட்ட முதல் வீரர் க்றிஸ் மோரிஸ் அல்ல. அடுத்த சில மேட்ச்களில் ஓரளவு அடித்து ஆடினாலும், கிறிஸ் மோரிஸ் நிலையான ஆட்டத்தை பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் கொடுக்க மாட்டார். அடுத்தசில போட்டிகளில் விளையாடுவாரா என்பதே என்னை பொறுத்தவரைக்கும் கேள்வி தான் என்று கணிக்கிறேன்.
மேலும், மோரிஸ் என்ன செய்கிறார் என்பதைப் பற்றி சிறப்பாகச் சொல்ல என்னிடம் ஏதுமில்லை. வேண்டும் என்றால் இரண்டு போட்டிகளுக்கு ரன் அடிக்க வாய்ப்புள்ளது. சில போட்டிகளில் காணாமல் போய்விடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு அந்த பேட்டியில் பீட்டர்ஸன் கூறியுள்ளார்.