'நேத்து வரைக்கும் அந்தப் பேச்சு பேசுன முன்னாள் வீரர்'... 'CSK ஜெயிச்சதும் போட்ட ட்வீட்!'... 'கிழித்து தொங்கவிட்ட ரசிகர்கள்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற்றதையடுத்து முன்னாள் வீரர் செய்த ட்வீட் ஒன்று கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்சிரேக்கர் தன்னுடைய சர்ச்சையான கருத்துக்களால் மிகவும் பிரபலம் ஆனவர். முக்கியமாக சிஎஸ்கே வீரர்களையும், பெங்களூர் வீரர்களையும் கடுமையாக விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்ட அவர் மும்பை வீரர்களை பெரும்பாலும் ஆதரித்தே பேசுவார். கிரிக்கெட் விமர்சகர் வர்ணனை செய்யும் போது பாரபட்சம் இன்றியே பேச வேண்டும். ஆனால் இவர் இந்திய வீரர்களைப் பற்றியே சர்வதேச போட்டிகளில் மோசமாக விமர்சனம் செய்து, மொத்தமாக தற்போது வர்ணனை குழுவில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
அதிலும் குறிப்பாக இவருக்கும் ஜடேஜாவிற்கும் இடையில் கடந்த 2 வருடமாகவே அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், ஜடேஜா எப்போது களத்திற்கு வந்தாலும் சஞ்சய் மஞ்சிரேக்கர் அவரை மோசமாக விமர்சனம் செய்தும், கிண்டல் செய்தும் வந்துள்ளார். இந்நிலையிலேயே தற்போது ஆஸ்திரேலியா செல்லும் இந்திய டி20 அணியில் ஜடேஜா தேர்வானதை மஞ்சிரேக்கர் விமர்சனம் செய்து இருந்தார். ஜடேஜா சரியான டி20 வீரர் கிடையாது. அவரை அணியில் எடுத்து இருக்கக் கூடாது என அவர் விமர்சனம் செய்து இருந்தார்.
அதற்கு ஒரு நாளிலேயே ஜடேஜா தனது பேட்டிங் மூலம் நேற்று பதிலடி கொடுத்தார். 11 பந்தில் 31 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணியை ஜடேஜா வெற்றிபெற வைத்தார். இதையடுத்தே தற்போது ஜடேஜாவை மஞ்சிரேக்கர் பாராட்டியுள்ளார். நேற்றைய போட்டி பற்றி அவர் செய்துள்ள ட்வீட்டில், "சிஎஸ்கேவின் வெற்றியை பார்க்க சந்தோசமாக இருக்கிறது. ரூத்துராஜ் சிறப்பாக தொடக்கம் கொடுத்தார். ஜடேஜா ஆட்டத்தை சிறப்பாக பினிஷ் செய்தார். ப்ரில்லியண்ட்" என ஜடேஜாவை பாராட்டியுள்ளார்.
அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சஞ்சய் மஞ்சிரேக்கரை விளாசியுள்ளனர். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஜடேஜாவை இப்படித்தான் பேசுகிறீர்கள், ஆனால் ஜடேஜா உங்களுக்கு வசமாக பதிலடி கொடுக்கிறார் எனவும், பல முறை உங்களுக்கு ஜடேஜா பதிலடி கொடுத்தும் ஏன் அவரை மீண்டும் மீண்டும் சீண்டுகிறீர்கள் எனவும், எப்படித்தான் உங்களால் இப்படியெல்லாம் பேச முடிகிறதோ எனவும் பலர் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Felt so nice to see CSK win last night. Rituraj Gaekwad set it up, Jadeja finished it off! Brilliant!👏👏#CSKvKKR
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) October 30, 2020