'ருத்துராஜோட 'SPARK'... தோனிக்கு ஏன் இவ்ளோ நாள் தெரியாம போச்சு!?.. தோனியின் சர்ச்சை பேச்சு... வருத்தெடுக்கும் ரசிகர்கள்!.. 'என்னா தல?'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பின் தோனி அளித்த பேட்டி பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

நேற்று கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. மிகவும் திரில்லாக சென்ற இந்த போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா 172 ரன்கள் எடுத்தது.
அதன்பின், பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியின் ருத்துராஜ், ஜடேஜா, ராயுடு அதிரடியாக ஆட, சிஎஸ்கே அணி 178 ரன்கள் எடுத்து வென்றது. இந்த நிலையில், நேற்று சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பின் கேப்டன் தோனி அளித்த பேட்டி பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.
அவர் தனது பேச்சில், போட்டியில் இப்போதுதான் முதல் முறையாக வானிலை எங்களுக்கு சாதகமாக சென்றது. இந்த சீசனில் ஜடேஜா சிறப்பாக ஆடி வருகிறார். சிஎஸ்கேவில் டெத் ஓவர்களில் ஸ்கோர் அடித்த ஒரே வீரர் ஜடேஜாதான்.
அணியில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்தோம். ருத்துராஜ் தனது திறமையை நிரூபித்துள்ளார். தான் எப்படிப்பட்டவர் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.
அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரை எங்களால் சரியாக கவனிக்க முடியவில்லை. அவர் அணியில் வலம் வர கூடிய திறமையான இளைஞர். அவர் அதிகம் பேசமாட்டார். இதனால் அவரை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை. முதல் இரண்டு போட்டிகள் அவர் நினைத்த மாதிரி செல்லவில்லை. ஆனால், அதன்பின் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார், என்று தோனி குறிப்பிட்டுள்ளார்.
இதில், ருத்துராஜ் சரியாக பேசவில்லை. இதனால் அவருக்கு வாய்ப்பு வழங்க முடியாமல் போய்விட்டது. அவரின் திறமையை புரித்து கொள்ள முடியாமல் போய்விட்டது என்று தோனி குறிப்பிட்டு இருக்கிறார். தோனியின் இந்த பேச்சு சர்ச்சை ஆகியுள்ளது. ஒரு கேப்டன்தான் அணியில் இருக்கும் வீரர்களிடம் பேசி அவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வர வேண்டும்.
ஒரு இளைஞர் பேசவில்லை என்று அவரை உட்கார வைக்க கூடாது. தோனியிடம் பேச பலருக்கும் அச்சம் இருக்கும். அப்படி இருக்கும் போது தோனி தான் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை பேச வைக்க வேண்டும்.
தோனி கேப்டன் போல பழகாமல் நட்பாக பழகி இருந்தால், ருத்துராஜ் தனது மனதில் இருந்ததை பேசி இருப்பார். ஆனால், அதை தோனி செய்யவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது.
தோனி அணிக்குள் இருக்கும் வீரர்களிடம் இன்னும் கொஞ்சம் இயல்பாக பழக வேண்டும் என்று கூறுகிறார்கள். அதே சமயம் தோனி தனது பேட்டியில், இந்த வருட சீசனில் சிலர் ஆடியதை பார்க்கும் போது அடுத்த வருடம் யார் அணியில் ஆடுவார்கள் என்பது தெரிகிறது என்று கூறியுள்ளார்.
இதனால் கண்டிப்பாக சிஎஸ்கே அணியில் ரூத்துராஜுக்கு உறுதியான இடம் இருக்கும் என்று கருதப்படுகிறது. கண்டிப்பாக ரூத்துதான் அடுத்த சிஎஸ்கே ஓப்பனர் என்று கூறுகிறார்கள்.

மற்ற செய்திகள்
