"தோனியோட விருப்பம் இதுதான்னு தெளிவா தெரியுது... ஆனா, அதுக்கு அவரு"... 'தொடர் விமர்சனத்திற்கு நடுவே பிரபல வீரர் அட்வைஸ்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணி நடப்பு சீசனில் பிளே ஆப்பிற்கு தகுதி பெறாத நிலையில் கேப்டன் தோனியின் ஃபார்ம் குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக இந்தாண்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேற உள்ளது. நடப்பு சீசனில் ஒருபக்கம் சென்னை அணி வீரர்கள் மோசமாக சொதப்ப, மறுபக்கம் கேப்டன் தோனியின் பேட்டிங்கும், கேப்டன்சியும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
இந்நிலையில் தோனி குறித்து பேசியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா, "ஐபிஎல் தொடரில் ஒரு சீசனுக்கும் அடுத்த சீசனுக்கும் நீண்ட இடைவெளி உள்ளது. இப்படி நீண்ட காலத்திற்கு விளையாடாமல் இருப்பது நல்லதல்ல. அடுத்த சீசனுக்குள் சில கிரிக்கெட் தொடரில் விளையாடி தோனி தனது ஆட்டத்தை மீட்டெடுக்க வேண்டும். தோனி விளையாட விரும்புகிறாரென தெளிவாகத் தெரிகிறது. ஒரு வீரர் ஃபார்மில் இல்லாததும் ஃபார்முக்கு திரும்புவதும் சகஜமான ஒன்றுதான். எல்லா வீரர்களும் இந்த சூழலை எதிர்கொள்வார்கள். ஆனால் ஒரு சில வீரர்களின் செய்திதான் பெரிதாக பேசப்படும்.
தோனி தனக்கு ஒரு அரை சதம் வேண்டும் என்பதை விட அணியின் வெற்றியே முக்கியம் என்று நினைப்பவர். அணிக்கு எந்த வகையிலும் பங்களிக்க முடிந்தால், 10 ரன்கள் எடுத்தாலும் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். ஐபிஎல் போன்ற தலைசிறந்த கிரிக்கெட் தொடர்களில் தோனி விளையாட வேண்டும் என நான் விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
