'வெற்றியோ... தோல்வியோ... 'இது' ரொம்ப முக்கியம்'!.. கற்பூரத்தில அடிச்சு சபதம் எடுத்த மாதிரி... மொத்த டீமும் டார்கெட் பண்ண ஒரே விஷயம் 'இது' தான்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தானுக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் சிஎஸ்கே வீரர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே விஷயத்தை மனதில் வைத்து அதிரடியாக ஆடி வந்தது பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
சிஎஸ்கேவிற்கும் ராஜஸ்தானுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் சிஎஸ்கேவும், ராஜஸ்தானுக்கு எதிராக களமிறங்கியது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டியது.
பொதுவாக சிஎஸ்கே அணியில் பவர் பிளேவில் வீரர்கள் யாரும் பெரிதாக ஆட மாட்டார்கள். ஆட்டம் போக போக மிடில் ஓவர்களில் வேகம் எடுத்து, கடைசியில் அதிரடியாக ரன்களை குவிப்பார்கள். ஆனால், இன்று தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டினார்கள்.
முக்கியமாக ரூத்துராஜ் அவுட் ஆனாலும் கூட, டு பிளாசிஸ் சிக்ஸ், பவுண்டரி என்று வெளுத்து வாங்கினார். உனட்கட் ஓவர், ஸ்பின் பவுலர் ஓவர்களில் குறி வைத்து சிஎஸ்கே வீரர்கள் அதிரடி காட்டினார்கள். அதேபோல் மற்றொரு புறம் மொயின் அலியும் முதல் பந்தில் இருந்தே சிக்ஸ், பவுண்டரி என்று வேகமாக ஆடினார்.
மொயின் அலி அவுட்டான பின் வந்த ராயுடுவும் பவுண்டரி, சிக்ஸ் என்று ஸ்பின் பவுலர்களை குறி வைத்து அடித்தார். அதிலும் ராகுல் திவாட்டியாவின் ஒரே ஓவரில் ராயுடு 2 சிக்ஸ் அடித்து ரன் ரேட்டை எகிற வைத்தார்.
இதற்கிடையே, ரெய்னாவால் பெரிய அளவில் அடிக்க முடியவில்லை என்றாலும் தேவைப்படும் நேரங்களில் சிக்ஸ் அடித்தார். டாப் ஆர்டர் வீரர்கள் எல்லோரும் ரன் ரேட் 9க்கும் குறையாமல் பார்த்துக் கொண்டனர். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
முதலாவதாக மும்பை பிட்சில் 180க்கும் குறைவாக டார்கெட் வைத்தால் அது பெரிய சிக்கலாகும். ராஜஸ்தான் அணி எளிதாக அதை எடுத்துவிடும். இதனால் தொடக்கத்தில் இருந்தே சிஎஸ்கே ரன் ரேட் 9க்கும் குறையாமல் பார்த்துக்கொண்டது.
மேலும், சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டர் சிறப்பாக இருக்கிறது. கடைசி வரை பேட்டிங் செய்ய வீரர்கள் இருக்கிறார்கள். இதனால் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் விக்கெட் செல்லும் என்று கவலைப்படாமல் அதிரடியாக ஆடி வருகிறார்கள். டெஸ்ட் இன்னிங்ஸ் போல் நிதானமாக ஆடாமல் முதல் பாலில் இருந்தே இன்று வீரர்கள் அதிரடியாக ஆட இதுவே காரணமாக இருந்தது.