'முதல்ல சிஎஸ்கே போட்ட பிளான் இதுதான்'... 'அப்பறம்தான் தோனி வந்தாரு'... 'நிறைய பேருக்கு தெரியாது'... 'பிரபல வீரர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணி குறித்து பெரும்பாலானோருக்கு தெரியாத விஷயம் ஒன்றை சிஎஸ்கே மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான பத்ரிநாத் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கே இதுவரை 10 சீசன்களில் விளையாடியுள்ள நிலையில், அனைத்து முறையுமே பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றிருப்பதுடன், 8 முறை இறுதி போட்டிக்கு முன்னேறி, அதில் 3 முறை ஐபிஎல் டைட்டிலை வென்றுள்ளது. மேலும் ஐபிஎல்லில் விளையாடிய அனைத்து சீசன்களிலுமே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற ஒரே அணியாகவும் சிஎஸ்கே உள்ளது. 2008ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணிக்காக தோனி விளையாடிவரும் சூழலில், அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அவர் கருதப்படுகிறார். இந்நிலையில், சிஎஸ்கே அணி குறித்து பெரும்பாலானோருக்கு தெரியாத விஷயம் ஒன்றை சிஎஸ்கே மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான பத்ரிநாத் பகிர்ந்துள்ளார்.
தன்னுடைய யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் பத்ரிநாத், "ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு சிஎஸ்கே நிர்வாகம் சேவாக்கைத்தான் கேப்டனாக எடுக்க நினைத்தது. ஆனால் சேவாக், அவருடைய சொந்த ஊரான டெல்லி அணியில் ஆட விரும்பியதாலேயே, வேறு யாரை எடுக்கலாம் என சிஎஸ்கே நிர்வாகம் யோசித்தது. அதன்பிறகே அதற்கு சில மாதங்களுக்கு முன் டி20 உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்த தோனியை சிஎஸ்கே அணி கேப்டனாக எடுத்தது. 2008ஆம் ஆண்டு தோனி ரூ 6 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த சீசனில் தோனி தான் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்" எனத் தெரிவித்துள்ளார்.