'ரெய்னாவிற்கு பதிலாக களமிறங்கும் டேவிட் மலான்?'... 'சிஎஸ்கேவில் இணைகிறாரா?'... 'வைரலாகப் பரவிய தகவலுக்கு சிஎஸ்கே CEO பதில்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் இணையவுள்ளதாக வெளியான தகவல் குறித்து அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19ஆம் தேதி தொடங்கவுள்ள சூழலில், ஐபிஎல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதும் நிலையில், அங்கு சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா போட்டியிலிருந்து விலகியுள்ளதால் அவருக்கு மாற்று வீரராக யார் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னாவிற்கு மாற்றாக இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து டேவிட் மலான் பற்றிய தகவலை மறுத்துள்ள சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், "இந்த தகவல் எனக்கே புதிதாக உள்ளது. அணியில் சேர்க்க வேண்டிய வெளிநாட்டு வீரர்கள் அனைவரையும் தேர்வு செய்துவிட்டோம். எனவே எங்கள் அணியில் இன்னொரு வெளிநாட்டு வீரரை எப்படி தேர்வு செய்யமுடியும் எனத் தெரியவில்லை" எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
