'ரெய்னா எடத்துக்கு'... 'இந்த GUN PLAYER தான் கரெக்ட்டு'... 'இவர விளையாட வைக்கலாம்'... 'வெளிப்படையாக சொன்ன சிஎஸ்கே வீரர்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியில் ரெய்னா இடத்தில் விளையாட சரியான வீரர் யார் என்பது குறித்து ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள நிலையில், முன்னதாக தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்து நாடு திரும்பியுள்ளார். இதையடுத்து சிஎஸ்கே அணியின் முக்கிய வீரரான ரெய்னாவின் இடத்தில் யார் விளையாடப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன், "சிஎஸ்கே அணியில் ரெய்னாவின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினமான ஒன்று. ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரெய்னா இரண்டாவது இடத்தில் உள்ளார். அத்துடன் ஜக்கிய அரபு அமீரகம் போன்ற ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமான மைதானங்களில் அவரைப் போன்ற ஒரு வீரர் ஒவ்வொரு அணிக்கும் நிச்சயம் தேவை.
அந்த வகையில் தற்போது ரெய்னாவின் இழப்பை ஈடுகட்டும் விதமாக முரளி விஜய் போன்ற 'Gun Player' ஒருவரை களம் இறக்கினால் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் முரளி விஜய் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு இரண்டிற்கும் சிறப்பாக விளையாடக் கூடியவர். அதுமட்டுமில்லாமல் அவருக்கு டி20 போட்டிகளில் விளையாடி நல்ல அனுபவம் உள்ளதால் நான் ரெய்னாவின் இடத்திற்கு அவரையே பரிந்துரைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
