'வேற ஒரு டீமா இருந்தா விபூதி அடிச்சிருப்பாங்க!'.. 'உலகத்தரம் வாய்ந்த ஒரு கேப்டன்தான் என் மேல நம்பிக்கை வெச்சு'.. நெகிழும் வீரர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 11, 2020 09:12 AM

நபீல் ஹஷ்மியின் யூ டியூப் ஷோவில் கலந்துகொண்ட சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன்,  ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இல்லாவிட்டாலும் அணியில் போதிய அனுபவமும் தரமும், போட்டிகளில் ஆடி இறுக்கமாக உள்ள வீரர்களும் இந்த முறையும் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை உண்டாக்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

CSK chances to win world class captain put trust on me, shane watson

அனுபவமும் தரமும் வீரர்களிடம் இருப்பதாலேயே கஷ்டமான சூழல்களை எதிர்கொள்ள முடியும் என்றும். அதனால்தான் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக தங்களுக்கு அமையும் என்றும், என்ன இன்னும் கொஞ்சம் வேகத்தை அதிகரிக்க வேண்டும் அவ்வளவுதான் என்றும் ஷேன் வாட்சன் குறிபிட்டுள்ளார்.

அத்துடன் டி20 தொடரில்  கடந்த 4 ஆண்டுகளாக ஆடுவதும் ஆடாததுமாக இருந்து வரும் தனக்கு தற்போதுதான் எனக்கு நிறைய புரிதல் உண்டாகியுள்ளாதாகவும், 2018 ஐபிஎல் சீசனும், கடந்த ஆண்டு சிஎஸ்கே போட்டியும் தன்னை தக்கவைத்ததாகவும், இதே வேறு அணிகளாக இருந்தால் ரன்கள் இல்லாததற்கு நிச்சயம் எடுத்திருப்பார்கள் என்றும்  ஆனால் சிஎஸ்கே அணி, சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான அந்த இன்னிங்ஸிக்கு முன்னால் கூட தன்னை காத்ததாகவும் கூறி நெகிழ்ந்துள்ளார்.

மேலும் சிஎஸ்கே தன் மீது நம்பிக்கை வைத்ததால்தான், அடுத்த சில நல்ல இன்னிங்ஸ்கள் தன்னிடமிருந்து வரும் என்பது தனக்கே தெரியவந்ததாகவும்,  உலகத்தரம் வாய்ந்த கேப்டன்கள்தான் இப்படி ஒரு நம்பிக்கையை வீரர் ஒருவர் மீது வைப்பார்கள் என்றும் தோனியை புகழ்ந்துள்ளார் வாட்சன்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. CSK chances to win world class captain put trust on me, shane watson | Tamil Nadu News.