'எவ்ளோ சொல்லியும் கேக்காம'... 'அவர அப்படியே காப்பி அடிச்சாரு, அதனாலதான்'... 'ஐபிஎல்லுக்கு முன் பரபரப்பை கிளப்பியுள்ள முன்னாள் தேர்வுகுழு தலைவர்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇளம் வீரர் ரிஷப் பந்த் குறித்து முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இந்திய அணியில் விளையாட தொடங்கிய போதிருந்தே இளம் வீரரான ரிஷப் பந்த் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அவர் தோனியுடன் ஒப்பிட்டும் பேசப்பட்டார். இதையடுத்து 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்குப்பின் தோனி இந்திய அணியில் விளையாடாத சூழலில், தொடர்ந்து இந்திய அணியில் விளையாடி வந்த ரிஷப் பந்த் பேட்டிங், விக்கெட் கீப்பிங் இரண்டிலும் பார்ம் அவுட் ஆனார். அதன்பின்னர் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக களமிறங்கினார்.
இந்நிலையில் ரிஷப் பந்த் குறித்து பேசியுள்ள முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், "தோனியுடன் தன்னை ஒப்பிட்டு பேசியதில் ரிஷப் பந்த் ஒரு பரவச நிலையை அடைந்தார். அதிலிருந்து மீள வேண்டுமென நாங்கள் பலமுறை அவரிடம் கூறினோம். தோனி முற்றிலும் வேறான ஒரு வீரர். உங்களுக்கும் திறமை உள்ளதால் தான் நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம். ஆனால் ரிஷப் பந்த் தோனியை அப்படியே காப்பி அடித்தார். அவருடைய மேனரிசங்களைக் கூட அப்படியே பின்பற்றினார்.
அதன்காரணமாகவே அவர் வழி மாறினார். அவருடைய நல்ல வேளையாக தோனி தற்போது ஒய்வு பெற்று விட்டதால், ரிஷப் பந்த் அவருடைய நிழலில் இருந்து வெளியே வருவார் என நம்புகிறேன். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணிலும், இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து மண்ணிலும் டெஸ்ட் சதம் அடித்த ஒரேவீரர் அவர். அவரிடம் திறமை உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.