IPL 2020: பாதியில் வெளியேறிய 'முன்னணி' வீரர்கள்... எந்த அணிக்கு 'பாதிப்பு' அதிகம்னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு

கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு முழுக்க, முழுக்க வெளிநாட்டில் நடைபெறவுள்ளது. கோலாகலமாக நாளை தொடங்கும் ஐபிஎல் போட்டிகளை காண, ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
அதே நேரம் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்படுவது, முற்றிலும் புதிய சூழ்நிலை, தொடரின் பாதியில் இருந்து முன்னணி வீரர்கள் விலகியது என ஒவ்வொரு அணிக்கும் பல்வேறு சிக்கல்களும் எழுந்துள்ளன.
நீண்ட இடைவெளிக்கு பின் தோனி கிரிக்கெட் விளையாட இருப்பதாலும் நடப்பு சாம்பியன் மும்பை அணியுடன் முதல் போட்டியை சென்னை அணி எதிர்கொள்வதாலும் ரசிகர்கள் நாளை நடைபெறும் போட்டியை காண ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை முன்னணி வீரர்கள் பலர் தொடரில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். அவர்கள் குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் சென்னை அணியில் இருந்து விலகி உள்ளனர். இவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை சென்னை அணி இதுவரை அறிவிக்கவில்லை.
டெல்லி கேபிடல்ஸ்
கிறிஸ் வோக்ஸ், ஜேசன் ராய் ஆகியோர் விலக அவர்களுக்கு பதிலாக அன்ரிச் நோர்ட்ஜே, டேனியல் சாம்ஸ் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஹாரி குர்ணி கொல்கத்தா அணியில் இருந்து விலக அவருக்கு பதிலாக அலி கான் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ்
கடந்த ஆண்டு மும்பை அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்த லசித் மலிங்கா இந்த முறை தொடரில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக ஜேம்ஸ் பட்டின்சனை மாற்று வீரராக அந்த அணி அறிவித்து உள்ளது.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
இதுவரை கோப்பை வெல்லாத பெங்களூர் அணியில் இருந்து கனே ரிச்சர்ட்ஸன் விலக, அவருக்கு பதிலாக ஆடம் ஜாம்பாவை அந்த அணி மாற்று வீரராக அறிவித்து உள்ளது.

மற்ற செய்திகள்
