ரெய்னாவுக்கு பதிலா தமிழக வீரருக்கு 'ஸ்கெட்ச்' போடும் கேப்டன்... மொத மேட்சுல யாரெல்லாம் வெளையாட போறாங்க?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்னும் 3 தினங்களில் ஐபிஎல் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும், சென்னை அணியும் மோதவுள்ளன. மும்பை அணி செம பார்மில் இருக்க, சென்னை அணியில் ரெய்னா, ஹர்பஜன் என அடுத்தடுத்து 2 வீரர்கள் வெளியேறி விட்டனர். போதாதற்கு ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மீண்டும் கொரோனா பாஸிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.

இதுவரையில் தோனி இவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை தேர்வு செய்யவில்லை. இதனால் மும்பை அணியுடனான போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் ரெய்னாவுக்கு பதிலாக முரளி விஜயை பயன்படுத்திக்கொள்ள தோனி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஓபனிங் பேட்ஸ்மேன்கள்
ஓபனிங் பேட்ஸ்மேன்களாக பாப் டூ பிளசிஸ், முரளி விஜய், ஷேன் வாட்சன் ஆகியோரில் யாரேனும் இருவர் இறங்கலாம். இல்லை எனில் சுழற்சி அடிப்படையில் மூவருக்குமே வாய்ப்புகள் கிடைக்கலாம்.
3-வது இடத்தில் அம்பாதி ராயுடு, தோனி இருவரில் ஒருவரும் 4-வது வரிசையில் கேதார் ஜாதவ், ஜடேஜா இருவரில் ஒருவரும் களமிறங்கலாம்.
மும்பை அணிக்கு எதிரான அணி வீரர்கள் (உத்தேசமாக)
1. ஷேன் வாட்சன்
2. பாப் டூ பிளசிஸ்/ முரளி விஜய்
3. அம்பாதி ராயுடு
4. தோனி
5. கேதார் ஜாதவ்
6. ரவீந்திர ஜடேஜா
7. டுவைன் பிராவோ
8. ஷர்துல் தாகூர்
9. தீபக் சாஹர்
10. லுங்கி நிகிடி
11. பியூஷ் சாவ்லா

மற்ற செய்திகள்
