வரிசை கட்டும் சிக்கல்களால்... 3-வது வீரரையும் 'இழக்கும்' சிஎஸ்கே காரணம் என்ன?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் தள்ளி,தள்ளி வைக்கப்பட்டு ஒருவழியாக வருகின்ற 19-ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கவுள்ளது. இதற்காக வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மிகவும் வலுவான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்தடுத்து தொடர் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
முன்னதாக சென்னையின் முக்கிய வீரர்களாக திகழ்ந்த சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் சென்னை அணியில் இருந்து விலகினர். இதனால் இந்த வருடம் சகுனமே சரியில்லை என கிரிக்கெட் ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்து இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது அணியின் இளம்வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மீண்டும் கொரோனா உறுதியாகி உள்ளது.
தீபக் சாஹர் போலவே ருதுராஜ் கெயிக்வாட்டும் 14 நாட்கள் குவாரன்டைனில் இருந்தார். அதன் முடிவில் இரண்டு பரிசோதனைகள் எடுக்கப்பட்ட போது அவருக்கு அதில் பாஸிடிவ் என முடிவு வந்தது. இதை அடுத்து அவர் மீண்டும் குவாரன்டைனில் இருந்து வருகிறார். அடுத்த சில நாட்களில் எடுக்கப்படும் டெஸ்டில் நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அவரால் விளையாட முடியும். இல்லையெனில் மீண்டும் அவர் குவாரன்டைன் செய்யப்படுவார்.
சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு மாற்று வீரர்களை சென்னை அணி இதுவரை தேர்வு செய்யவில்லை. தற்போது ருதுராஜூம் சிக்கலில் இருப்பதால் 3-வது வீரரையும் இழக்கும் அபாயத்தில் சிஎஸ்கே அணி உள்ளது. குறிப்பாக மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது. கேப்டன் தோனி மாற்று வீரர்களை களமிறக்குவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.