'இதெல்லாம் பாத்து கத்துக்கங்க அஸ்வின்!' - ரசிகரின் அட்வைஸ்.. 'ஒருநாள் வெயிட் பண்ணுங்க.. ரெஸ்ட் எடுத்துட்டு..' - அஸ்வினின் 'வைரல்' பதில்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபந்துவீச்சுக்கு முன் எதிர்முனையில் ரன் அவுட் செய்வது குறித்து ஓரிரு நாட்களில் பேசுவதாக ரசிகர் ஒருவருக்குப் இந்திய சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலளித்துள்ளார்.
மான்கேடிங் (Mankdaing) என்று சொல்லப்படும் பந்துவீச்சாளர், பந்தை வீசும் முன், அவர் பக்கம் இருக்கும் பேட்ஸ்மேன் க்ரீஸை தாண்டி வந்தால் ரன் அவுட் செய்வதே மான்கேட் ரன் அவுட் முறை கிரிக்கெட் விதிமுறைகளின் படி சரியானதுதான் என்றாலும், விளையாட்டில் அது போட்டி மனப்பான்மைக்கு எதிரானது என்கிற கருத்தும் உள்ளது.
அப்படித்தான் கடந்த வருடம் ஐபிஎல் போட்டியில், தன் பக்கம் இருந்த ஜாஸ் பட்லர் க்ரீஸை விட்டு வெளியேறியதும், பந்து வீச்சுக்கு முன் அஸ்வின் அவரை ரன் அவுட் செய்தது பெரிய சர்ச்சையைக் கிளப்பியதை அடுத்து இன்று வரை அஸ்வின் செய்தது சரியா தவறா என்கிற விவாதமும் கிரிக்கெட் உலகில் ஓயாமால் நடைபெற்று வருகிறது. அஸ்வினோ தான் செய்தது விதிமுறைகளின் படி சரி என்பதில் உறுதியுடன் இருக்கிறார். அப்போது பஞ்சாப் அணியில் இருந்த அஸ்வின் இம்முறை டெல்லி அணிக்கு விளையாடவுள்ள நிலையில், டெல்லி அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங், இதுபோல ரன் அவுட் செய்வதை விமர்சித்ததுடன், அஸ்வினுடன் இதுபற்றி கண்டிப்பாக பேசுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
அண்மையில் புதன்கிழமை அன்று ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில், பந்துவீசும் முனையில் இருந்து க்ரீஸை விட்டு இங்கிலாந்து வீரர் அடில் ரஷித் வெளியே வந்த போது, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் அவரை ரன் அவுட் செய்யாமல் எச்சரித்தார்.
Please learn something @ashwinravi99
This is how you play the game. #ENGvAUS pic.twitter.com/bYFTUJ9nXy
— Shahid (@cricket_worm) September 16, 2020
இதை வைத்த்து ரசிகர் ஒருவர் “இதனைக் கற்றுக் கொள்ளுங்கள் அஸ்வின். இப்படி தான் விளையாடுங்கள்” என்று அஸ்வினைக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார்.
I believe in fighting the good fight but wait till the day after and I will get back to you on this. I would like to give a day to myself.🙏 https://t.co/2LJufUNAnX
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) September 16, 2020
இதற்கு அஸ்வின், "எனக்கு நியாயமாக சண்டை போடுவது பிடிக்கும். எனினும் நாளை மறுநாள் வரை பொறுத்திருங்கள். ஒரு நாள் ஓய்வுக்கு பின் இதுகுறித்து உங்களிடம் பேசுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். வரும் செப்டம்பர் 19 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2020 தொடங்குவதால், அஷ்வின் உள்ளிட்ட பல வீரர்கள் தற்போது அங்கு முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.