‘ரெண்டு வார ரெஸ்ட்க்கு பிறகு ரீ எண்ட்ரி கொடுத்த சென்னையின் ஆல்ரவுண்டர்’.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 21, 2019 08:45 PM
காயம் காரணமாக இரண்டு வாரம் ஓய்வில் இருந்த சென்னை அணியின் ஆல்ரவுண்டர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் டி20 லீக்கின் மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 38 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 39 -வது போட்டியான இன்றைய(21.04.2019) போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.
இதில் காயம் காரணமாக கடந்த இரண்டு வாரங்கள் நடைபெற்ற போட்டிகளில் விளையாடாத சென்னை அணியின் ஆல்ரவுண்டர் டூவைன் பிராவோ இன்றைய போட்டியின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுத்துள்ளார். அதே போல் கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாத தோனியும் இன்றைய போட்டியில் மீண்டும் கேப்டனாக களம் காண்கிறார். இதனால் சாம் பில்லிங்ஸ் மற்றும் கர்ண் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது. இதனை அடுத்து பெங்களூரு அணி பேட்டிங் செய்து வருகிறது.
