'இந்த ஷாட்' அடிக்குறத முதல்ல BAN பண்ணனும்...! 'தப்புன்னு தெரியுறப்போ எரிச்சலா இருக்கு...' - இயான் சேப்பல் கருத்து...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் விளையாட்டுகளில் இனி 'ஸ்விட்ச் ஹிட்' ஷாட்கள் விளையாட தடைவிதிக்கவேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான இயான் சேப்பல் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடைபெற்றுவரும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை அதிரடியாகக் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா வீரரான மேக்ஸ்வெல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியில் முக்கியக் காரணமாக அமைந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான இயான் சேப்பல் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் தொடர் குறித்து தன் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
அப்போது, 'ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் அற்புதமாக இருந்தது. முக்கியமாக மேக்ஸ்வெல் மற்றும் ஸ்மித் விளையாடுகிற சில ஷாட்கள் நம்பமுடியாத வகையில் உள்ளது. ஆனால், இது சரியானதாகத் தெரியவில்லை.
பந்துவீச்சாளர் எந்தப் பக்கம் இருந்து பந்துவீச போகிறேன் என்று நடுவரிடம் கூறுகிறார். பவுலர் பந்துவீசும்போது பேட்ஸ்மேன் இடக்கை வீரராக மாறிவிடுகிறார். அதில் எனக்கு எந்தப் பிரச்சனையுமில்லை. ஆனால் இவ்வாறு செய்வது தவறு எனத் தெரியும்போது எனக்கு எரிச்சலூட்டுகிறது. பேட்ஸ்மேன் தனது நிலையை மாற்றி இது போன்று விளையாடினால் அது விதிகளுக்கு புறம்பானது என்று அறிவிக்க வேண்டும்" எனக் கூறினார்.