எல்லாம் ஓகே...! ஆனால் நம்ம பவுலர்ஸ் கிட்ட பிரச்சனையே இதான்...! - இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், மூன்று 20-20, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல்கட்டமாக இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில், தொடர்ச்சியான இரு தோல்விகளைச் இந்திய அணி சந்தித்தது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணியிடம் இழந்தது.
இந்த நிலையில், தொடர் தோல்விக்கான காரணம் குறித்து பலரும் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். விராட் கோலியின் தலைமை குறித்து, காம்பீர் மற்றும் நெஹ்ரா தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்ஃபான் பதான், இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து, தனது கருத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி இர்ஃபான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நமது இந்திய அணியின் பவுலர்களின் தரம் குறித்து கேள்வியெழுப்ப முடியாது. அதே சமயம், அவர்களது நிலையான ஆட்டமின்மை குறித்து கண்டிப்பாக கேள்வி எழுப்பலாம்.
ஆஸ்திரேலியாவில், துல்லியமாகப் பந்துவீசும் முறையை வேகமாகக் கண்டுபிடிப்பதில்தான் அனைத்தும் உள்ளது. அது இன்னும் நம் அணியிடம் நடக்கவில்லை" எனக் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
