MKS Others

‘நான் மட்டும் இல்ல, யாராலும் அவரை குறை சொல்ல முடியாது’!.. நிருபர் கேட்ட கேள்வி.. காட்டமாக பதிலளித்த கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Dec 06, 2021 07:29 PM

இந்திய அணியில் ரஹானே நீடிப்பாரா என நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு விராட் கோலி காட்டமாக பதிலளித்துள்ளார்.

I can\'t judge his form, Virat Kohli backs struggling Rahane

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனை அடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியை 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது.

I can't judge his form, Virat Kohli backs struggling Rahane

இந்த நிலையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரஹானே மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. அதில் கடைசியாக ரஹானே விளையாடிய 23 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட சதம் அடிக்கவில்லை. 2 அரைசதங்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் 8 முறை ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகியுள்ளார். அதேபோல் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்சில் 35 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 4 ரன்கள் மட்டுமே ரஹானே எடுத்தார்.

I can't judge his form, Virat Kohli backs struggling Rahane

இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் விராட் கோலியிடம், ‘இந்திய அணியில் ரஹானே நீடிப்பாரா?’ என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், ‘நான் மட்டும் இல்லை யாராலும் ரஹானேவின் ஃபார்ம் குறித்து விமர்சனம் செய்ய முடியாது. முக்கியமான பல போட்டிகளில் ரஹானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

I can't judge his form, Virat Kohli backs struggling Rahane

இதுபோன்ற வீரர்களுக்கு நாம்தான் ஆதரவு கொடுக்க வேண்டும். தனி ஒருவர் மீது வைக்கப்படும் இதுபோன்ற விமர்சனங்களை அணியாக எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அணியில் எந்தவொரு வீரர் மீதும் வெளியில் வைக்கப்படும் விமர்சனங்களை வைத்து எந்த முடிவும் எடுக்க மாட்டோம்’ என விராட் கோலி காட்டமாக பதில் அளித்துள்ளார்.

Tags : #VIRATKOHLI #INDVNZ #RAHANE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. I can't judge his form, Virat Kohli backs struggling Rahane | Sports News.