VIDEO: ‘பிரமாண்ட சிக்ஸ்’.. பெண் ரசிகையின் தலையில் விழுந்த பந்து.. யாருப்பா அந்த பேட்ஸ்மேன்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே எதிரான போட்டியின் போதும் லக்னோ அணி வீரர் அடித்த பந்து பெண் ரசிகையின் தலையில் விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் தொடரின் 7-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 50 ரன்களும், சிவம் துபே 49 ரன்களும், மொயின் அலி 35 ரன்களும் எடுத்தனர். மேலும் 7-வதாக களமிறங்கிய விக்கெட் கீப்பர் தோனி 6 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்சர் உட்பட 16 ரன்கள் விளாசினார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த லக்னோ அணி 19.3 ஓவர்களில் 211 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக டி காக் 61 ரன்களும், எவின் லூயிஸ் 55 ரன்களும், கேப்டன் கே.எல்.ராகுல் 40 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில், இப்போட்டியில் லக்னோ வீரர் அடித்த ஒரு சிக்சர், பெண் ரசிகையின் தலையில் விழுந்தது. அதில் போட்டியின் 19-வது ஓவரை சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபே வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஆயுஷ் படோனி சிக்சர் விளாசினார். அந்த பந்து ஸ்டேடியத்தில் இருந்த பெண் ரசிகையின் தலையில் விழுந்தது. இதில் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என சொல்லப்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
This six from bidoni injured a lady in crowd #CSKvLSG pic.twitter.com/ppzRTvm3Lf
— timeSquare🇮🇳 (@time__square) March 31, 2022

மற்ற செய்திகள்
