சிஎஸ்கே மேட்சை தலைகீழாய் மாற்றிய ‘ஒத்த’ ஓவர்.. வில் ஸ்மித் போட்டோ போட்டு கலாய்த்த சேவாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுலக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போதும் சிஎஸ்கே அணி 19-வது ஓவரை சிவம் துபேவுக்கு கொடுத்தது குறித்து சேவாக் கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.

ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கும் இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா 50 ரன்களும், ஆல்ரவுண்டர்களான சிவம் துபே 49 ரன்களும், மொயின் அலி 35 ரன்களும் எடுத்தனர். லக்னோ அணியை பொறுத்தவரை ரவி பிஸ்னோய், ஆண்ட்ரூ டை மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த லக்னோ 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் டி காக் 61 ரன்களும், எவின் லூயிஸ் 55 ரன்களும், கேப்டன் கே.எல்.ராகுல் 40 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் இப்போட்டியின் 19-வது ஓவரை சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபேவுக்கு கொடுத்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார். அதில், சமீபத்தில் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் ஹாலிவுட நடிகர் வில் ஸ்மித்தின் மனைவியை தொகுப்பாளர் உருக கேலி செய்தார். அதனால் மேடைக்கு சென்ற வில் ஸ்மித், அவரை பளாரென கண்ணத்தில் அடித்தார். இதை சிவம் பந்து வீச வந்ததும், லக்னோ அணி வீரர் சிக்சர் விளாசியதை ஒப்பிட்டு சேவாக் பகிர்ந்துள்ளார்.
இப்போட்டியின் கடைசி 2 ஓவர்களில் 34 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் லக்னோ அணி இருந்தது. அப்போது சிஎஸ்கே அணியின் கேப்டன் ஜடேஜா, சிவம் துபேவுக்கு 19-வது ஓவரை கொடுத்தார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட லக்னோ அணியின் ஆயுஷ் படோனி சிக்சருக்கு விளாசினார்.
Lucknow seeing Shivam Dube bowl the 19th. pic.twitter.com/Al0IN1ftKT
— Virender Sehwag (@virendersehwag) March 31, 2022
இதனை அடுத்து 2 பந்துகள் வொய்டாக வீச, அதற்கடுத்த 2 பந்துகளும் பவுண்டரிக்கு சென்றது. மேலும் அந்த ஓவரின் கடைசி பந்தில் எவின் லூயிஸ் சிக்சர் விளாசினார். இதனால் அந்த ஒரு ஓவரில் மட்டும் 25 ரன்கள் சென்றது. இதுதான் ஆட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதனால் 19-வது ஓவரை சிவம் துபேவுக்கு கொடுத்தது குறித்து ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
