“கடைசியில அவர் ஒரு போர்வீரன் மாதிரி சண்டை போட்டாரு”.. சிஎஸ்கே தோல்விக்கு பின் சுரேஷ் ரெய்னா போட்ட ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுலக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தபின் சுரேஷ் ரெய்னா பதிவிட்ட ட்வீட் கவனம் பெற்று வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், லக்னோ சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா 50 ரன்களும், சிவம் துபே 49 ரன்களும், மொயின் அலி 35 ரன்களும் எடுத்தனர். லக்னோ அணியை பொறுத்தவரை ரவி பிஷ்னோய், ஆண்ட்ரூ டை மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதனை அடுத்து 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் (40 ரன்கள்) மற்றும் டி காக் (61 ரன்கள்) ஆகிய இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். இந்த ஜோடியை நீண்ட நேரமாக சிஎஸ்கே அணியால் பிரிக்க முடியவில்லை. அப்போது டுவைன் பிரிட்டோரியஸ் வீசிய ஓவரில் கே.எல்.ராகுல் மற்றும் டி காக் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மனிஷ் பாண்டேவும் 5 ரன்னில் வெளியேறினார்.
இந்த சமயத்தில் எவின் லூயிஸ் மற்றும் ஆயுஷ் படோனி ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும் சிக்சர், பவுண்டரி என விளாசினர். குறிப்பாக எவின் லூயிஸ் 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதனால் 19.3 அவர்கள் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்து லக்னோ அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இப்போட்டி குறித்து சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘இரண்டு அணிகளுக்குமே இது சிறப்பான போட்டி. ஆட்டம் எவ்வளவு கடினமாக இருந்தாலும் சிரித்துக்கொண்டே கடினமாக உழைக்க வேண்டும். ரவி பிஷ்னோய் பில்டிங்கில் அசத்தினார். ஒரு போர்வீரன் சண்டை போடுவது போல் கடைசியில் எவின் லூயிஸ் செயல்பட்டார். மிகப்பெரிய வெற்றிக்கா லக்னோ அணிக்கு வாழ்த்துக்கள்’ என சுரேஷ் ரெய்னா பதிவிட்டுள்ளார்.