CSK மேட்சில் கமெண்ட்ரி பாக்ஸ்ல தோனிக்கு பெரிய விசில் அடித்த ரெய்னா... அது மட்டுமா தமிழ்ல வேற பேசியிருக்காரு! வைரல் வீடியோ
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 210 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சென்னை அணியில் உத்தப்பா 50 (27), டூபே 49 (30) ரன்களை குவித்தனர்.
மும்பை ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் சுரேஷ் ரெய்னா தமிழ் கமெண்ட்ரிக்கு வருகை தந்தார். கிரிக்கெட் வீரர் பத்ரி நாத், கிரிக்கெட் ஆய்வாளர் ஆர் கே உடன் கமெண்ட்ரி செய்தார். தனக்கு பிடித்த உணவுகள் குறித்தும், தனது CSK அணி உடனான நினைவுகள் குறித்தும் பகிர்ந்தார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான பிரசித்தி பெற்ற 2010 ஆம் ஆண்டு தர்மசாலா போட்டி குறித்து சிறப்பான நினைவுகளை பகிர்ந்தார் . இர்பான் பதானின் கடைசி ஓவரை தோனி எதிர்கொண்ட விதம் குறித்தும் பேசினார்.
மேலும் ரசிகரின் வேண்டுகோளுக்கிணங்க தோனிக்கு பெரிய விசிலடித்து ரசிகர்களை குஷிப்படுத்துனார். மேலும் வணக்கம் மக்களே என தமிழில் பேசி ஆச்சர்யமளித்தார்.
@ImRaina 🥺💔pic.twitter.com/QIP7kn2reG
— Harsha Naidu Pspk 🦅 (@harshapspk1234) March 31, 2022

மற்ற செய்திகள்
