‘தல’ தோனியுடன் இருக்கும் போட்டோவுடன் கம்பீர் போட்ட ‘CAPTION’.. வேறலெவலில் வைரலாகும் ‘INSTAGRAM’ போஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் கௌதம் கம்பீர் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 7-வது லீக் நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 50 ரன்களும், சிவம் துபே 49 ரன்களும், மொயின் அலி 35 ரன்களும் எடுத்தனர். அதேபோல் 7-வது வீரராக களமிறங்கிய விக்கெட் கீப்பர் தோனி 6 பந்துகளில் 16 ரன்கள் (2 பவுண்டரி 1 சிக்சர்) விளாசினார். லக்னோ அணியை பொறுத்தவரை ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான் மற்றும் ஆண்ட்ரூ டை ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த லக்னோ அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை எடுத்தது. அதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் டி காக் 61 ரன்களும், எவின் லூயிஸ் 55 ரன்களும், கேப்டன் கே.எல்.ராகுல் 40 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான தோனியும், கௌதம் கம்பீரும் சந்தித்து பேசிக் கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட போட்டோவில் கௌதம் கம்பீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ‘மீண்டும் கேப்டனை சந்தித்ததில் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக கௌதம் கம்பீருக்கும், தோனிக்கும் இடையே சண்டை இருப்பதாக சொல்லப்படுகிறது. கௌதம் கம்பீரும் பல இடங்களில் தோனியை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். இந்த சூழலில் நேற்றைய போட்டியின் போது தோனியுடன் கௌதம் கம்பீர் பேசிய போட்டோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.