"கங்குலி RESIGN பண்றாரா??.." ஒரே ஒரு ட்வீட்டால் எழுந்த குழப்பம்.. கடைசியில் அவரே கொடுத்த விளக்கம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் ஆன சவுரவ் கங்குலி, தற்போது பிசிசியின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

Also Read | மாப்பிள்ளை இல்லாமல் கல்யாணமா..? இளம்பெண் எடுத்த வினோத முடிவு.. இந்தியாவுல இப்படி ஒரு திருமணமா.?
இந்நிலையில், நேற்று அவர் பகிர்ந்திருந்த ட்வீட் ஒன்று, அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதற்கான விளக்கத்தையும் தற்போது கங்குலியே கொடுத்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பிசிசிஐயின் தலைவராக இருந்து வரும் கங்குலி, இந்திய அணியின் முன்னேற்றம் தொடர்பாக நிறைய சிறந்த முன்னெடுப்புகளை உருவாக்கி இருந்தார்.
குழப்பத்தை ஏற்படுத்திய ட்வீட்
அதே போல, இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாக ரீதியிலும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அப்படி ஒரு சூழ்நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ட்வீட் ஒன்றை கங்குலி பகிர்ந்திருந்தார். அதில், 1992 ஆம் ஆண்டு முதல், இந்த முப்பது ஆண்டு காலத்தில் கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. அது மட்டுமில்லாமல், இத்தனை ஆண்டுகளில் உங்கள் அனைவரின் ஆதரவும் எனக்கு கிடைத்துள்ளது. எனது பயணத்தில் பங்கு வகித்து, எனக்கு ஆதரவாக இருந்து, நான் இந்த இடத்திற்கு வர உதவி செய்த அனைத்து நபர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. நான் அடுத்ததாக தொடங்க போகும் விஷயம், நிறைய பேருக்கு உதவியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். அதிலும், உங்கள் அனைவரின் ஆதரவும் தொடர்ந்து வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த ட்வீட் காரணமாக, கங்குலி பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து விலக போகிறார் என்ற கருத்து பரவலாக உருவானது. அது மட்டுமில்லாமல், வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாமா என்றும் ரசிகர்கள் சற்று குழம்பி போயினர். ஆனால், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகவில்லை என விளக்கம் கொடுத்தார்.
கங்குலி கொடுத்த விளக்கம்
இந்நிலையில், தன்னை சுற்றி உருவான வதந்திகள் தொடர்பாக, கங்குலியும் விளக்கம் அளித்துள்ளார். புதிய செயலி ஒன்றை உலக அளவில் அறிமுகம் செய்து வைத்த கங்குலி, இதுகுறித்த விஷயங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து, தன்னுடைய ராஜினாமா குறித்து பேசிய கங்குலி, "நான் பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலக போவதாக வதந்தி கிளம்பியதை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். அது ஒரு எளிய ட்வீட் தான். அதில், ராஜினாமா குறித்தோ, வேறு எதை பற்றியோ நான் சொல்லவே இல்லை" என தெரிவித்துள்ளார்.
இதனால், கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலக போவதில்லை என்பது உறுதியாகி உள்ளது.

மற்ற செய்திகள்
