‘செம சர்ஃப்ரைஸ்’.. IPL கப் ஜெயிச்ச குஜராத் 6-வது இடம்.. RCB முதலிடம்.. வெளியான ‘வேறலெவல்’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் சீசனில் அதிகமாக டுவிட்டரில் பேசப்பட்ட அணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Also Read | ஃபிரண்ட்ஸ் உடன் கேக் வெட்டி‘பிறந்த நாள்’ கொண்டாட்டம்.. கடைசியில் இளைஞருக்கு நேர்ந்த துயரம்..!
நடந்து முடிந்த 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகம் பேசப்பட்ட அணி குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. ஆனால் இந்த அணிகள், டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட அணிகளின் பட்டியலில் முதல் 3 இடங்களுக்குள் கூட இடம்பெறவில்லை. ஆச்சரியம் அளிக்கும் வகையில் 2-வது தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த வெளியேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிதான் நடப்பு சீசனில் அதிகமாக டுவிட்டரில் பேசப்பட்ட அணிகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் அதிகம் டுவீட் செய்யப்பட்ட அணியாகவும் ஆர்சிபி அணி உள்ளது.
இதில் நான்கு முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-ம் இடத்திலும், 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 3 ஆம் இடத்திலும் உள்ளது. இந்த இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.
இதனை அடுத்து 4-வது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 5-வது இடத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் இடம் பெற்றுள்ளன. நடப்பு சீசனில் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி 6-வது இடத்தை பிடித்துள்ளது.
அதேபோல் அதிகம் டுவீட் செய்யப்பட்ட வீரர்கள் பட்டியலில் ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் சிஎஸ்கே கேப்டன் தோனியும், 3-வது இடத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவும், 4-வது இடத்தில் சிஎஸ்கே அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவும் இடம்பெற்றுள்ளனர்.