“உன்னால சாதிக்க முடியாதுன்னு நெறைய பேர் சொன்னாங்க, ஆனா..!” IPL கோப்பை வென்ற தம்பிக்கு க்ருணால் உருக்கமாக வாழ்த்து..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அவரது சகோதரரும் ஒருநாள் பாண்டியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடந்த 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுக அணியாக குஜராத் அணி களமிறங்கியது. அதன்படி விளையாடிய முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தியுள்ளது. அதனால் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் அந்த அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரரான க்ருணால் பாண்ட்யா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘என் சகோதரா.. இந்த வெற்றிக்கு பின்னால் எவ்வளவு உழைப்பு உள்ளது என்று உனக்கு மட்டுமே தெரியும். அதிகாலையிலேயே பயிற்சி, ஒழுக்கம், மன தைரியம். உன்னுடைய கடின உழைப்புக்கு கிடைத்த பரிசுதான் இந்த கோப்பை. இந்த வெற்றிக்கு நீ தகுதியானவன்.
உன்னால் சாதிக்க முடியாது என்று நிறைய பேர் விமர்சித்தனர். ஆனால் நீ வரலாறு படைத்து இருக்கிறாய். லட்சக்கணக்கான ரசிகர்கள் உனது பெயரை உச்சரித்து உற்சாகப்படுத்தியதை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது’ என க்ருணால் பாண்ட்யா குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் சார்பாக க்ருணால் பாண்ட்யா விளையாடினார். இந்த அணி எலிமினேட்டர் சுற்று வரை முன்னேறி வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
People had written you off but you keep writing history. Wish I was there when more than a lakh people were cheering your name. ❤️ @hardikpandya7 pic.twitter.com/0zDjRIVXuz
— Krunal Pandya (@krunalpandya24) May 31, 2022
Also Read | ‘செம சர்ஃப்ரைஸ்’.. IPL கப் ஜெயிச்ச குஜராத் 6-வது இடம்.. RCB முதலிடம்.. வெளியான ‘வேறலெவல்’ தகவல்..!

மற்ற செய்திகள்
