"அம்மாவாக போகிறார்".. தோழியை கரம்பிடித்த பிரபல கிரிக்கெட் வீராங்கனை சாரா டெய்லரின் எமோஷனல் பதிவு.. வாழ்த்தும் லெஜெண்ட்ஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Feb 23, 2023 02:04 PM

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை சாரா டெய்லரின் அண்மை பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Former England cricketer Sarah Taylor announces partner pregnancy

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | "செல்ஃபி எடுக்கலைன்னு தாக்குதல்?".. பிரித்வி ஷா புகாரில் கைதான சப்னா கில்.. "அவங்கதான் என்னை தாக்கிட்டாங்க".. சப்னா பதில் புகார்..!

இந்தியாவுக்கு எதிரான T-20 போட்டியில் அறிமுகமான இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை சாரா டெய்லர். 126 ODIகளில், விளையாடியுள்ள அவர் ஏழு சதங்கள் மற்றும் 20 அரை சதங்களை எடுத்துள்ளார். அதே வேளையில் 90 T20 இன் இன்னிங்ஸில் 2,177 ரன்கள் எடுத்துள்ளார். 10 முறை இங்கிலாந்தில் கேப்டனாக செயல்பட்டு, 330 ரன்களை எடுத்திருக்கிறார்.

33 வயதான அவர் 2017 இல் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் ஒரு பகுதியாக இருந்தார். இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டெய்லர் ஓய்வு பெற்றார். தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட இருப்பதாக டெய்லர் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, தனது தோழி டயானாவை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக டெய்லர் தெரிவித்திருந்தார். அதன்படி இவர்கள் இருவரது திருமணமும் நடைபெற்றது.

Former England cricketer Sarah Taylor announces partner pregnancy

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில் டயானா கர்ப்பமாக இருப்பதாக சாரா டெய்லர் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள ட்விட்டர் பதிவில்,"தாயாக வேண்டும் என்பது என் துணையின் கனவு. இந்தப் பயணம் எளிதானது அல்ல, ஆனால் டயானா ஒருபோதும் கைவிடவில்லை. அவள் சிறந்த அம்மாவாக இருப்பாள் என்று எனக்குத் தெரியும். அதன் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இன்னும் 19 வாரங்கள், வாழ்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Former England cricketer Sarah Taylor announces partner pregnancy

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்த பதிவு ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில், "வாழ்த்துகள். இருவருக்கும் அற்புதனமான பயணம் காத்திருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சாரா டெய்லர் மற்றும் டயானாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read | வரும்போது நல்ல சேதியோடு வாங்க.. புதுமண தம்பதிகளுக்கு சம்பளத்துடன் ஒரு மாசம் லீவ்.. அரசின் அதிரடி.. எங்கப்பா..?

Tags : #ENGLAND CRICKETER #SARAH TAYLOR #ENGLAND CRICKETER SARAH TAYLOR #PARTNER #PREGNANCY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Former England cricketer Sarah Taylor announces partner pregnancy | Sports News.