வரும்போது நல்ல சேதியோடு வாங்க.. புதுமண தம்பதிகளுக்கு சம்பளத்துடன் ஒரு மாசம் லீவ்.. அரசின் அதிரடி.. எங்கப்பா..?
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் சில மாகாணங்களில் புதுமணத் தம்பதிகளுக்கு 30 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான காரணம் தான் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
சீனா என்றவுடன் நம்முடைய ஞாபகத்திற்கு வருவது அங்குள்ள மக்கள் தொகை தான். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த கடந்த 1980 ஆம் ஆண்டு ஒரு குழந்தை திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியது. கடந்த 2015 ஆம் ஆண்டு வரை இந்த திட்டம் அங்கே நடைமுறையில் இருந்தது. பொருளாதார சூழ்நிலை, கல்வி செலவுகள் இத்தகைய காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த சூழ்நிலையில் கடந்த வருடம் சீனாவின் குழந்தை பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்தது. கடந்த 60 வருடங்களில் முதன்முறையாக குழந்தை பிறப்பு விகிதம் வீழ்ச்சியை சந்தித்ததால் அதனை ஈடுகட்ட அரசு பல்வேறு திட்டங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கியது.
Images are subject to © copyright to their respective owners.
கடந்த வருடம் சீனா வெளியிட்ட தகவலின் படி ஆயிரம் பேருக்கு 6.77 குழந்தைகள் பிறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனாவின் சில மாகாணங்கள் புதிய முயற்சியை எடுத்து வருகின்றன. அதன் பலனாக புதுமண தம்பதிகளுக்கு சம்பளத்துடன் கூடிய 30 நாட்கள் விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இது குழந்தை பிறப்பு விகிதத்தை நிச்சயமாக அதிகரிக்கும் என்கிறார்கள் அதிகாரிகள். வடமேற்கு மாகாணமான கான்சூ, நிலக்கரி உற்பத்திக்கு பேர்போன ஷாங்ஷி ஆகிய மாகாணங்களில் தொழிலாளர்களுக்கு 30 நாட்கள் திருமண விடுப்பு அளிக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
ஷங்காயில் 10 நாட்களும் சிச்சுவான் மாகாணத்தில் மூன்று நாட்களும் திருமணத்திற்கு விடுப்பு அளிக்கப்படுகிறது. மொத்தமாக சீனாவை பொருத்தவரையில் திருமணத்திற்கு முன்பாக மட்டுமே விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இது குறித்து பேசி உள்ள தென்மேற்கு நிதி மற்றும் பொருளாதாரப் பல்கலைக்கழகத்தின் சமூக மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் யாங் ஹையாங்,"திருமண விடுமுறையை நீட்டிப்பது கருவுறுதல் விகிதத்தை அதிகரிப்பதற்கான பயனுள்ள வழிகளில் ஒன்றாகும்" எனத் தெரிவித்திருக்கிறார்.