அது டீம் இல்ல.. குடும்பம்... CSK அணியில் விளையாடிய நாட்கள்.. ஹர்பஜன் சிங் உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Mar 17, 2023 06:06 PM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய நாட்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

Former Cricketer Harbajan Singh Recalls Days when he played in CSK

                                 Images are subject to © copyright to their respective owners.

Also Read | தலைவர் என்ட்ரி.. இந்தியா - ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி.. நேரில் கண்டுகளிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

ஐபிஎல் 2023

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் துவங்க உள்ள நிலையில் இதற்கான பயிற்சியிலும் அணிகள் இறங்கியுள்ளது. இதனிடையே ஐபிஎல் குறித்து முன்னாள் வீரர்கள் பேசி வருகின்றனர்.

Former Cricketer Harbajan Singh Recalls Days when he played in CSK

Images are subject to © copyright to their respective owners.

ஹர்பஜன் சிங்

இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய நாட்கள் குறித்து மனம் திறந்திருக்கிறார் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இதுகுறித்து அவர் பேசுகையில்," என் கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச்சிறந்த வருடங்கள் அந்த 2 ஆண்டுகள் தான். எவ்வித அழுத்தமோ, நாடகத்தன்மையோ இருக்காது. முடிவை பற்றி கவலைப்படாமல் நம்முடைய கடமைகளை செய்யலாம். தோற்றாலும் பரவாயில்லை. அது வித்தியாசமான அனுபவம். சுவாரஸ்யமாகவும் இருந்தது. எல்லோரும் சேர்ந்தே இருப்போம். வீரர்களாக மட்டுமன்றி குடும்பங்களுடன் இந்தியாவையே சுற்றிவந்தோம். அவை மிக வேடிக்கையான காலமாக இருந்தது" எனத் தெரிவித்திருக்கிறார்.

Former Cricketer Harbajan Singh Recalls Days when he played in CSK

Images are subject to © copyright to their respective owners.

கோப்பை

2018 இல் சிஎஸ்கே மூன்றாவது முறையாக கோப்பையை வென்றபோது, ​​​​ஹர்பஜன் சென்னை அணியின் ஒரு பகுதியாக இருந்தார். அணியின் மிகவும் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளராக அவர் முக்கிய பங்கு வகித்தார். அதே நேரத்தில் ஐபிஎல் 2021 இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை சிஎஸ்கே தோற்கடித்து நான்காவது முறையாக கோப்பையை வென்றது. அந்த ஆண்டு ஹர்பஜன் கொல்கத்தா அணியில் விளையாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது. ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக சென்னை அணி தொடரில் இருந்து வெளியேறியது ரசிகர்ளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் பெரும் பலத்தோடு கம்பேக் கொடுக்கும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Also Read | தாயார் மறைவு.. ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன முதல்வர் முக.ஸ்டாலின்..!

Tags : #CRICKET #HARBAJAN SINGH #CSK #IPL 2023

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Former Cricketer Harbajan Singh Recalls Days when he played in CSK | Sports News.