இந்த '2 ரூபாய்' காயினுக்கு 'இப்படி' ஒரு ஜாக்பாட்டா...! அதுவும் 'துட்டு' பின்னாடி 'அவரு' படம் இருந்துச்சுன்னா 'லட்சாதிபதி' தான்...! - செய்ய வேண்டியது என்ன...?

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Issac | Jun 13, 2021 08:49 AM

ஒரு குறிப்பிட்ட வருடத்தில் வெளியான இரண்டு ரூபாய் கைவசம் இருந்தால் லட்சாதிபதி ஆகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கு சில விதி முறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

Quickr website 2 rupees coin chance to earn five lakhs

குறிப்பாக, 1994-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் அச்சிடப்பட்டு வெளிவந்த இரண்டு ரூபாய் நாணயங்கள் இருந்தால் அதற்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். ஆனால், அந்த நாணயத்திற்கு பின்புறம் தேசியக்கொடி அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.

இந்த அரிய நாணயங்களில் ஒன்று இருந்தால் Quickr இணையதளத்தில் அதனை விற்க ஆன்லைன் விற்பனையாளராக முதலில் பதிவு செய்ய வேண்டும். பின்னர், அந்த நாணயத்தை போட்டோ எடுத்து அதை தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பின்னர் நாணயம் வைத்திருப்பவரின் முகவரி, செல்பேசி எண் மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும்.

விவரங்கள் கிடைக்கப்பட்ட பின்பு, பழைய நாணயங்களை வாங்குபவர்கள் தொடர்பு கொண்டு ரூபாய் குறித்த விவரங்களை பேசுவார்கள். அவர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தின் அடிப்படையில் உங்கள் நாணயத்தை விற்கலாம்.

அதேபோன்று சுதந்திரத்திற்கு முன்னால் அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் இருந்தால் அதற்கு 2 லட்சம் தரப்படும் என கூறப்படுகிறது. ஆனால் அதற்கு விதிமுறையாக அந்த நாணயத்தின் பின்புறம் விக்டோரியா மகாராணியின் படம் இருக்க வேண்டும். அதேபோன்று, 1918-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசர் கிங் ஜார்ஜ் படம் இருந்தால் அந்த ஒரு ரூபாய் நாணயத்தின் மதிப்பு ரூ. 9 லட்சம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Quickr website 2 rupees coin chance to earn five lakhs | Business News.