'ஜடேஜா மீது இவ்வளவு வன்மமா'!?.. கசிந்தது சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் PRIVATE CHAT!.. ரசிகர்களை கொந்தளிக்க வைக்கும் SCREEN SHOTS!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஜடேஜா குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அவதூறாக பேசியுள்ள தனிப்பட்ட உரையாடல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடந்த 2 தினங்களாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் சர்ச்சை பேச்சுக்கள் பேசுபொருளாகியுள்ளது. சமீபத்தில் அஷ்வின் "All time Great" ப்ளேயர் இல்லை என மஞ்ச்ரேக்கர் கூறியிருந்தது விவாதத்தை கிளப்பியது. இது ஓய்வதற்குள் ஜடேஜா குறித்த அவரின் உரையாடல் கசிந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது ஜடேஜாவுக்கும், முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. அதற்கு காரணம் அந்த தொடரின் போது வர்ணனையாளாராக இருந்த மஞ்ச்ரேக்கர், ஜடேஜா ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர் இல்லை என்பது போல் கருத்து தெரிவித்திருந்தார். இது ஜடேஜாவை கடுப்பாக்கியது.
அந்த தொடரின் அரையிறுதிப்போட்டியின் போது நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா திணறி வந்தது. அப்போது ஜடேஜா சரியான நேரத்தில் சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணியை வெற்றிக்கு சற்று அருகில் வரை கொண்டு சென்றார். 59 பந்துகளை சந்தித்த ஜடேஜா 77 ரன்களை விளாசினார். இதனைக் கண்டு நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் திகைத்துப்போனார்கள். அப்போது அரை சதம் அடித்த பிறகு ஜடேஜா, தனது பேட்டை மஞ்ச்ரேக்கருக்கு எதிராக வாளை சுழற்றுவது போல சுழற்றினார்.
இந்நிலையில், அப்போது நடந்த சம்பவம் குறித்து ரசிகர் ஒருவருடன் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசிய தனிப்பட்ட உரையாடல் வெளியாகியுள்ளது. அதில் அவர், நான் வீரர்களை பற்றி புகழ்ந்து பாடுபவன் அல்ல. அவர்களின் ஆட்டம் குறித்து ஆராய்ச்சி செய்பவன். நான் ஜடேஜா குறித்து கூறிய வார்த்தைகளுக்கு அவருக்கு அர்த்தம் தெரியாது. ஏனெனில், ஜடேஜாவுக்கு ஆங்கிலம் தெரியாது. அவருக்கு யாரோ ஒருவர் விளக்கியிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்களை எடுத்து சாதனை படைத்துள்ள அஷ்வினை "All time great" வீரர் என்று கூற முடியாது என மஞ்ச்ரேக்கர் தெரிவித்திருந்தது சர்ச்சையை கிளப்பியது. இந்த சூழலில் தற்போது ஜடேஜா குறித்து அவதூறாக பேசியிருப்பது மஞ்ச்ரேக்கர் மீதான ரசிகர்களின் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது.
I didn’t want to share this personal chat in public, even though it’s full to shit. But couldn’t help, coz ppl need to know this side of this man. @imjadeja would be proud of what he did to prove you wrong. @BCCI is this the kind of man you would want in your com panel in future? pic.twitter.com/AUjX301Foz
— soorya narayanan (@soorya_214) June 7, 2021