சவுதி VS கோலி!.. 13 ஆண்டுகளாக நீடிக்கும் பனிப்போர்!.. WTC FINAL-ல் பழி தீர்க்கப்படுமா?.. கோலியின் WEAKNESS-ஐ வெளியிட்ட சிறுவயது கோச்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக விராட் கோலிக்கு சிறுவயது பயிற்சியாளர் அட்வைஸ் கூறியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நெருங்கி வருவதால், ரசிகர்களுக்கு அது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தங்களது விருப்பமான வீரர்கள் எப்படி இந்த போட்டியில் செயல்பட போகிறார்கள், அவர்களுக்கு களம் எப்படி இருக்கும் என ஆராய தொடங்கியுள்ளனர்.
இங்கிலாந்து களம் இந்திய அணியை விட நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. ஏனெனில், நியூசிலாந்திலும் இதே போன்ற கள அமைப்பு தான் அதிகளவில் இருக்கும். எனவே, நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் எளிதாக பிட்ச்-இன் தன்மையை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் ஆட்டத்தை மாற்றிக் கொள்வார்கள். ஆனால், இந்திய அணியில் வீரர்கள் சற்று நேரம் பொறுத்திருந்து பிட்ச்-ஐ உணர்ந்த பின்னரே அடித்து ஆட முயல வேண்டும் என முன்னாள் வீரர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.
அதிலும் முக்கியமாக விராட் கோலிக்கு அறிவுரைகள் குவிந்து வருகின்றன. கேப்டன் கோலி சற்று ஆக்ரோஷமாக விளையாடக்கூடியவர். இதன் காரணமாக எளிதாக அவுட்டாக வாய்ப்புள்ளது. குறிப்பாக நியூசிலாந்து பவுலர் டிம் சவுதியின் பந்துவீச்சுக்கு எதிராக விராட் கோலி படு மோசமாக திணறுவார். இதுவரை 10 முறை சவுதியிடம் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார் கோலி.
இந்நிலையில், கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார். அவர் விராட் கோலிக்கு, தான் எங்கு தவறு செய்கிறோம் என்று தெரியாமல் இல்லை. சவுதியின் பந்தில் நல்ல ஸ்விங்கிங் இருக்கும். அவரின் பல பந்துகளை கோலி அடித்து விளையாடாமல் அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் திசையில் விட்டுவிட வேண்டும். சவுதி வீசும் லெந்த்தை வைத்து அந்த பந்தை விடலாமா அல்லது அடிக்கலாமா என்பதை சரியாக கணித்துவிட வேண்டும்.
கோலி - சவுதி இடையேயான போட்டி நீண்ட வருடங்களாக நடைபெறுகிறது. Under 19 போட்டிகளில் இருந்தே விராட் கோலிக்கு எதிராக நல்ல வியூகங்களை சவுதி வகுப்பார். எனவே, இந்த முறை அதுகுறித்து நன்கு பயிற்சி எடுக்க வேண்டும். அதே போல கோலிக்கு கவர் டிரைவ் மிகவும் பிடித்தமான ஷாட். ஆனால் அதனை விளையாடும்போது பல முறை ஸ்லிப்பில் கேட்ச்சாகிறார். எனவே, நன்கு யோசித்து அந்த ஷாட்களுக்கு செல்ல வேண்டும் என ராஜ்குமார் ஷர்மா தெரிவித்துள்ளார்.