தினேஷ் கார்த்திக் எடுக்கப் போகும் ‘புதிய’ அவதாரம்.. ‘செம’ ஹேப்பியில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Feb 23, 2021 02:28 PM

இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக், இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்க உள்ள ஒருநாள், டி20 தொடரின்போது புதிய அவதாரத்தை எடுக்க உள்ளார்.

Dk set to join the commentary box for limited-overs series

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், தமிழகத்தை சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக், இதுவரை 92 ஒருநாள் போட்டிகளில் 1,752 ரன்களும், 32 டி20 போட்டிகளில் 399 ரன்களும் எடுத்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பின் தினேஷ் கார்த்திக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

Dk set to join the commentary box for limited-overs series

இந்திய அணியின் முன்னாள் வீரர் தோனியின் ஓய்வுக்குப் பின் இளம் விக்கெட் கீப்பர்களுக்கு அதிகமாக வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட் கீப்பராக விளையாடி வருகின்றனர். இதனால் இந்திய அணிக்குள் மீண்டும் தினேஷ் கார்த்திக் வருவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதால், அவர் புதிய அவதாரத்தை எடுக்க முடிவு செய்துள்ளார்.

Dk set to join the commentary box for limited-overs series

அந்த வகையில் இந்தியா-இங்கிலாந்து இடையே நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடரின்போது, தினேஷ் கார்த்திக் முதல் முறையாக வர்ணனையாளர் அவதாரத்தை எடுக்க உள்ளார். இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் உரிமையை வாங்கியுள்ள ஸ்கை ஸ்போர்ட்ஸ் (Sky Sports) தொலைக்காட்சி நிறுவனம் வர்ணனையாளர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக்கையும் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dk set to join the commentary box for limited-overs series

ஏற்கெனவே வர்ணனையாளர்களாக ஹர்பஜன் சிங், கவுதம் கம்பீர், பர்தீப் படேல், ராபின் உத்தப்பா உள்ளிட்டோர் இருந்து வரும் நிலையில், அவர்களுடன் தினேஷ் கார்த்திக்கும் இணைய உள்ளார்.

Dk set to join the commentary box for limited-overs series

தற்போது தமிழக அணிக்கு கேப்டனாக இருந்து விஜய் ஹசாரே கோப்பையில் தினேஷ் கார்த்திக் விளையாடி வருகிறார். தமிழக அணிக்காக எடுத்துக் கொண்ட கடமைகளை முடித்துவிட்டுத்தான் வர்ணனையாளர் பொறுப்புக்கு வருவேன் என்றும், எந்தவிதத்திலும் தமிழக அணிக்கான கடமையிலிருந்து விலகமாட்டேன் என்றும் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dk set to join the commentary box for limited-overs series | Sports News.