‘மறுபடியும் நெஞ்சுவலி’!.. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டு கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கங்குலிக்கு கடந்த 2-ம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் உள்ள 3 தமனிகளில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. அதில் ஒரு அடைப்பு ஸ்டென்ட் குழாய் பொருத்தப்பட்டு அகற்றப்பட்டது. கொல்கத்தா மருத்துவமனையில் ஐந்து நாள் சிகிச்சைக்குப் பிறகு கங்குலி வீடு திரும்பினாா்.
அவரை வரவேற்க மருத்துவமனை முன்பும், அவரது வீட்டு முன்பும் ஏராளமான ரசிகா்கள் காத்திருந்தனா். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் கங்குலி வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றாா். அப்போது தாம் நலமுடன் இருப்பதாகவும், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினாா். இந்நிலையில் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டு கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
