'சேலத்துல இருந்தோம், அப்போ உங்கள வந்து பாக்கலாம்னு இருந்தோம்'... 'சென்னைக்கு வந்தா வீட்டுக்கு வரணும்'... நடராஜனை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சர்ப்ரைஸ் கால்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் இருந்து வந்த இளைஞரான நடராஜன், ஐபிஎல் போட்டியில் அசத்தியதன் மூலம் இந்திய சர்வதேச அணியில் வலைப்பந்து வீச்சாளராகும் வாய்ப்பு கிடைத்தது.
இதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த நடராஜனுக்கு ஒரு நாள் போட்டி, டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பும் கிடைத்தது. தனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை எந்தவித பிழையும் இல்லாமல் கெட்டியாக பிடித்துக் கொண்ட நடராஜன், அனைத்து போட்டிகளிலும் தன்னுடைய அசாத்திய பந்து வீச்சுத் திறமையால் செயல்பட்ட நிலையில், உலகளவில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக முடித்து விட்டு சொந்த ஊரான சேலத்திற்கு திரும்பியிருந்த நடராஜனுக்கு, ஊர் மக்கள் உற்சாக வரவேற்பை அளித்திருந்தனர்.
இந்நிலையில், தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் நடராஜனுக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதில், நடராஜனிடம், 'நான் நிறைய இடங்களில் உங்களை பற்றித் தான் பேசுகிறேன். நான் அப்படி உங்களை குறிப்பிட்டு பேசுவதற்கு காரணம், நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் கூட இன்னொருவர் வருவதற்கான வாய்ப்பை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். அரசியல் தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்கும் போது உங்களது முயற்சியை உதாரணமாக நான் பேசி வருகிறேன்.
அடுத்த முறை சேலத்திற்கு வந்தால் வீட்டிற்கு வருகிறோம். நீங்களும் சென்னைக்கு வந்தால் எங்களது வீட்டிற்கு வாருங்கள். வாழ்த்துக்கள்' என வீடிய காலில், உற்சாகமாக தங்களது வாழ்த்துக்களை சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் நடராஜனுக்கு தெரிவித்தனர்.
So happy to speak to our #Champion #cricket player #natrajan , he is an inspiration was great to connect to him @Natarajan_91 Thks @imAmithun_264 and @suryapralash27 pic.twitter.com/zurEF3xNX8
— Radikaa Sarathkumar (@realradikaa) February 1, 2021
இந்த வீடியோவை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், 'எங்களது சாம்பியனுடன் பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது' என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்.