'ஸ்ரேயாஸ் ஐயர்' சொன்ன அந்த ஒரே வார்த்தையால.., எழுந்த 'சலசலப்பு'... எல்லாத்துக்கும் 'FULLSTOP' வைக்க அவரே குடுத்த 'விளக்கம்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 'த்ரில்' வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், 'தான் ஒரு கேப்டனாகவும், சிறந்த வீரராகவும் தனது திறமையை வளர்த்துக் கொண்டு வருவதில் ரிக்கி பாண்டிங் மற்றும் சவுரவ் கங்குலிக்கு முக்கிய பங்குண்டு' என தெரிவித்தார். ஸ்ரேயாஸ் ஐயரின் இந்த பேச்சு கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் சர்ச்சையை கிளப்பியது.
காரணம், கடந்த ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த சவுரவ் கங்குலி, இந்த முறை பிசிசிஐயின் தலைவராக உள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் கங்குலிக்கு முக்கிய பங்கு உண்டு என குறிப்பிட்டது அவர் தற்போதும் டெல்லி அணிக்கு ஆலோசனை வழங்குகிறாரா என்றும், ஒரே நேரத்தில் இரண்டு பணிகளை மேற்கொள்கிறாரா என்றும் பலர் கேள்வியை எழுப்பியதால் பரபரப்பு உண்டானது.
இதன் காரணமாக, ஸ்ரேயாஸ் ஐயர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 'தனிப்பட்ட முறையில் ஒரு கேப்டனாக எனது வளர்ச்சிக்கு கங்குலி, ரிக்கி பாண்டிங் ஆகியோர் செய்த உதவியை பற்றித் தான் அப்படி குறிப்பிட்டேன்' என தெரிவித்துள்ளார்.
As a young captain, I am thankful to Ricky and Dada for being a part of my journey as a cricketer and captain last season.
My comment yesterday was to emphasise my gratitude towards the role they both have played in my personal growth as a captain.
— Shreyas Iyer (@ShreyasIyer15) September 21, 2020