ஐபிஎல்: “அவரோட பந்துவீச்சுலதான் சந்தேகமா இருக்கு!”.. சுழற்பந்துவீச்சாளர் மீது நடுவர்கள் ‘பரபரப்பு’ புகார்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேனின் பந்துவீச்சில் சந்தேகமிருப்பதாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். நேற்று அபுதாபியில் நடந்த ஐபிஎல் ஆட்டத்தி்ல், பஞ்சாப் அணியை 2 ரன்களில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது.165 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்து 2 ரன்களில் தோல்வி அடைந்தது.

பிரஷித் கிருஷ்ணா, சுனில் நரேன் வீசிய கடைசி இரு ஓவர்கள் ஆட்டத்தையே மாற்றின. கடைசி ஓவரில் நரேன் வீசிய அந்த பந்தை மேக்ஸ்வெல் தூக்கி அடிக்க, பவுண்டரி எல்லைக்கு 2 இன்ச் முன்பாக பந்து பிட்ச் ஆனதால் முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது. அதேசமயம் 2 இன்ச் தள்ளி பந்து பிட்ச் ஆகி இருந்தால் சிக்ஸர் சென்றிருக்கும். ஆட்டமும் சூப்பர் ஓவருக்கும் சென்றிருக்கும். இதில் இக்கட்டான நேரத்தில் சிறப்பாகப் பந்துவீசிய சுனில் நரேனின் பந்துவீச்சு அனைவராலும் பாராட்டப்பட்டது, கொல்கத்தா அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.
இந்நிலையில், சுனில் நரேன் பந்துவீசிய விதம் ஐசிசி விதமுறைகளுக்கு மாறாக இருப்பதாக களநடுவர் உலஹாஸ் காந்தி, கிறிஸ் கஃபானே இருவரும் , ஐபிஎல் அமைப்பிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் சுனில் நரேன் எச்சரிக்கைப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அடுத்துவரும் போட்டிகளில் சுனில்நரேன் பந்துவீசத் தடையில்லை. ஒருவேளை மீண்டும் நடுவர்கள் புகார் அளிக்கும்பட்சத்தில் ஐபிஎல் தொடர் முழுவதும் சுனில் நரேன் பந்துவீசத் தடைவிதிக்கப்படுவார். பிசிசிஐ அமைப்பின் பந்துவீச்சு சந்தேக ஆராய்வு குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபின்புதான் மீண்டும் நரேன் பந்துவீச அனுமதிக்கப்படுவார். சுனில் நரேன் கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சந்தித்த இதுபோன்ற பிரச்சினைகளால் 2015-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.
ஆனால் இன்னொரு முறை நடுவர்கள் இப்படி புகார் அளித்தால், நரேனுக்கு தடை விதிக்கப்படும் என்பதும் இருப்பினும் தற்போது அவர் பந்தவீசத் தடையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
