“டென்சனாதான் இருந்துச்சு.. ஆனா உள்ள இருக்குறது நம்ம தோனி”.. போட்டி முடிஞ்சதும் ஜடேஜா சொன்ன சூப்பர் பதில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின் சிஎஸ்கே அணியின் கேப்டன் ஜடேஜா, தோனி குறித்து பேசியுள்ளார்.
ஐபிஎல் 15-வது சீசனின் 33-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ஜடேஜா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேறினர். இதனை அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும், திலக் வர்மா 51 ரன்களும், க்ரிதிக் ஷோகீன் 25 ரன்களும் எடுத்தனர். அதனால் மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி விளையாடியது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து ராபின் உத்தப்பா 30 ரன்களும், அம்பட்டி ராயுடு 40 ரன்களும் டுவைன் பிரிடோரியஸ் 22 ரன்களும் எடுத்தனர்.
இந்த சூழலில் கடைசி 1 பந்தில் 4 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் சிஎஸ்கே அணி இருந்தது. அப்போது தோனி பவுண்டரி விளாசினார். அதனால் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இதில் தோனி 28 (13 பந்துகளில்) ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய சிஎஸ்கே அணியின் கேப்டன் ஜடேஜா, ‘போட்டி பரபரப்பாக சென்றதால், நாங்கள் பதற்றத்தில் இருந்தோம். ஆனாலும் தோனி ஆட்டமிழக்காமல் இருந்தது எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது. வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்ற உறுதியான நம்பிக்கையில் இருந்தோம். அதேபோல் கடைசியில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்துவிட்டார்.
முகேஷ் சௌத்ரி பவர் பிளேவில் சிறப்பாக பந்துவீசியது மகிழ்ச்சியான செய்தி. ஆனாலும் நாங்கள் தொடர்ந்து சுலபமான கேட்ச்களை விடுவது கவலையளிக்கிறது. இதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, தவறுகளை விரைவில் திருத்திக்கொள்வோம்’ என ஜடேஜா கூறியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://www.behindwoods.com/bgm8/